🌟 கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவானுடன் ராகு, நட்பு என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்
🌟 சாமர்த்தியமான பேச்சுக்களை உடையவர்கள்.
🌟 அறிவுக்கூர்மையும், விஷய ஞானமும் கொண்டவர்கள்.
🌟 எதையும் கூர்ந்து கவனித்து திறம்பட செயலாற்றக்கூடியவர்கள்.
🌟 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.
🌟 மற்றவர்களை கவர்வதில் அலாதி பிரியம் கொண்டவர்கள்.
🌟 அமைதியாக இருக்கக்கூடியவர்கள்.
🌟 ஆன்மீகத்தில் விருப்பம் கொண்டவர்கள்.
🌟 எந்த நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள்.
🌟 ஆடை, ஆபரணங்களின் மீது விருப்பம் உடையவர்கள்.
🌟 அறுசுவை உணவை ரசித்து உண்ணக்கூடியவர்கள்.
🌟 சிறு வாசனைகளையும் நுகரும் திறன் கொண்டவர்கள்.
🌟 இனிமையாக பேசி தனது காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக