-----------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
------------------------------------------------------
ராமு : கல்யாணமான புது தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?
சோமு : தெரியலையே...
ராமு : புருஷன் சமையல் பண்ண கத்துக்குறான். பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்குறா.
சோமு : 😛😛
------------------------------------------------------
ரமேஷ் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
தினேஷ் : வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒன்னு வந்துடுச்சு.
ரமேஷ் : 😣😣
------------------------------------------------------
வார்த்தை விடையாட்டு...!!
------------------------------------------------------
1. ய சி க வா ர தி ள் அ ல்
2. உ து மை டை பொ
3. ழ் நி ச் ர க சி நி ல்
4. து ம் ந மு மா த் ர க
5. டு ல் மொ ம கை லி ட்
விடை :
1. அரசியல்வாதிகள்
2. பொது உடைமை
3. நிகழ்ச்சிநிரல்
4. முத்து மாநகரம்
5. மல்லிகை மொட்டு
------------------------------------------------------
மூன்று நண்பர்கள்...!!
------------------------------------------------------
மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள்.
அங்கு நீதி தேவன் முதல் நபரை அழைத்து, 'உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்" என்றார்.
இந்த நபர் ஏன்? என்று கேட்டதற்கு, நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய் அதனால்தான் என்றார்.
அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.
மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார்.
இருவரும் ஏன்? என்று கேட்டதற்கு நீதி தேவன் இப்படி பதிலளித்தார்...
'அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றாள்" என்றார்.😂😂
------------------------------------------------------
இல்லை... இல்லை...!!
------------------------------------------------------
🐦 பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை.
🐍 மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை.
🐦 கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை.
🐊 கடலில் முதலைகள் இருப்பது இல்லை.
🐙 நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக