Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 பிப்ரவரி, 2021

டாடா ஸ்கை வழங்கும் இலவச 'டூயல்-பேண்ட் வைஃபை ரூட்டர்'.. 5 திட்டத்தில் எதுவேண்டுமானாலும் எடுத்துக்கோங்க..

இலவச

டாடா ஸ்கை நிறுவனம் இப்போது அதன் பிராட்பேண்ட் சேவை திட்டங்களுடன் தனது பயனர்களுக்கு இலவசமாக ஒரு வைஃபை ரூட்டரை வழங்குகிறது. இது நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி 'டூயல்-பேண்ட் வைஃபை ரூட்டர்' என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பும் எந்த திட்டத்திலிருந்தும் இந்த் இலவச ரூட்டரை பெற்றுக்கொள்ள முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இலவச ரூட்டர் உடன், டாடா ஸ்கை நிறுவனம் தனது பயனர்களுக்கான இணைப்பை இலவச இன்ஸ்டாலேஷன் உடன் வழங்குகிறது. டூயல்-பேண்ட் ரூட்டரின் சிறப்பு என்னவென்றால், இது 300 Mbps வேகம் வரை பயன்படுத்த அனுமதிக்கிறது மற்றும் பல இன்டர்நெட் அம்சங்களை எளிதாக்குகிறது. 300 எம்.பி.பி.எஸ்ஸை நாங்கள் குறிப்பிடுவதற்கான காரணம், டாடா ஸ்கை பிராட்பேண்ட் வழங்கும் மிக வேகமான திட்டம் 300 எம்.பி.பி.எஸ் திட்டமாகும்.

டாட்டா ஸ்கை பிராட்பேண்ட் சலுகைகள் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் இணைய சேவை வழங்குநர் (ஐஎஸ்பி) தனது பயனர்களுக்கு ஐந்து வெவ்வேறு திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் பயனர்களுக்கு 50 Mbps முதல் 300 Mbps வேகம் வரை பயன்படுத்த அனுமதிக்கிறது. இத்துடன் வரம்பற்ற தரவையும் வழங்குகின்றது. டாடா ஸ்கை இடமிருந்து கிடைக்கும் வரம்பற்ற டேட்டா என்பது 3.3TB அல்லது 3,300GB ஆகும்.

டாடா ஸ்கை பிராட்பேண்ட் நன்மைகள் பற்றி பார்த்தால், நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி இன்னும் நிறையக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவதாக, நிறுவனம் தனது ஃபைபர் நெட்வொர்க்கில் 99.9% இயக்க நேரத்தை வழங்குகிறது. பின்னர், 5 திட்டங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை வழங்குகிறது. பயனர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை மாற்றுவதற்கான டேட்டா ரோல்ஓவர் வசதியையும் வழங்குகிறது.

டாடா ஸ்கை நிறுவனம் அதன் பிராட்பேண்ட் நெட்வொர்க் மிகவும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளது. பயனர்கள் தங்கள் திட்டத்துடன் இலவச லேண்ட்லைன் இணைப்பையும் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், டாடா ஸ்கை பிராட்பேண்ட் அதன் பயனர்களுக்கு தற்போது ஐந்து திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

முதல் திட்டம் 50 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட திட்டமாகும், இது ஒரு மாத சந்தாவில் வாங்குவதற்குக் கிடைப்பதில்லை, பயனர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு இதை ரூ. 2097 என்ற விலையில் பெறலாம். இரண்டாவது திட்டம் 100 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட திட்டமாகும், இது ஒரு மாதாந்திர திட்டமாகும் இது உங்களுக்கு ரூ.950 என்ற விலையில் கிடைக்கிறது. பின்னர் 150 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட திட்டம் உள்ளது.

இந்த திட்டம் ஒரு மாத அடிப்படையில் ரூ. 1,050 என்ற விலையில் உங்களுக்கு கிடைக்கிறது. அதேபோல், 200 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ. 1,150 என்ற விலையில் கிடைக்கிறது. இறுதியாக, 300 எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ .1,600 என்ற விலையில் இப்போது கிடைக்கிறது. அனைத்து விலைகளும் ஜிஎஸ்டி இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக