ஹூவாய் மேட் எக்ஸ் 2 பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 8.01 அங்குல் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 50 எம்பி முதன்மை கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஹூவாய் மேட் எக்ஸ் கடந்த பிப்ரவரி 2019 இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நிறுவனம் தனது அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக வெய்போவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மைக்ரோ பிளாக்கிங் வலைதளம் வெளியிட்ட காட்சியின்படி, ஹூவாய் மேட் எக்ஸ் 2, முன்னதாக வெளியான ஸ்மார்ட்போன் இல்லாமல் உள்நோக்கி மடிக்கக்கூடிய வடிவமைப்பில் வரும் என தெரிவிக்கிறது.
மேலும் இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஹூவாய் மேட் எக்ஸ் 2., 8.1 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 2480x2220 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீத ஆதரவுடன் வருகிறது. மேலும் வெளிப்புற காட்சியில் 6.45 இன்ச் உயரம் கொண்ட டிஸ்ப்ளே இருக்கும் எனவும் கிரின் 9000 5nm சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டிருக்கும் எனவும் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது.
மேட் எக்ஸ் 2-ல் ஆண்ட்ராய்டு 10 எஸ் உடனான இஎம்யூஐ11, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4400 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை மூலம் இயக்கப்படுகிறது.
அதேபோல் ஹூவாய் மேட் எக்ஸ் ஓபன் செய்து பயன்படுத்தும்போது 8 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 2480 x 2200 பிக்சல்கள் தீர்மானம், பின்புறத்தில் 6.38 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்கத்தில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக