
அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், தனது பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார். அதேபோல் பெசோஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி வர இருக்கிறார்.
அமேசான் நிறுவனம்
அமேசான் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.
அமேசான் தலைமை செயல் அதிகாரி
இந்தநிலைியல் அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், தனது பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார். அதேபோல் பெசோஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி வர இருக்கிறார். 3 ஆம் காலாண்டில் இந்த பதிவி மாற்றம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பில் இருந்து விலகும் பெசோஸ்
1994 ஆம் ஆண்டு ஜெப் பெசோஸ் இதை புத்தகம் விற்பனை மையமாகவே தொடங்கினார். தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்தாலும் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஇஓ-வாக பொறுப்பேற்கும் ஆன்டி ஜெஸி
அமேசான் வெப் சர்வீசை தொடங்கி கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கிளவுட் பிளாட்பார்மாக உருவாக்கியவர் தற்போது புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்கும் ஆன்டி ஜெஸிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1997 ஆம் ஆண்டு அமேசானில் சேர்ந்தார்.
ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பு இல்லை
தனக்கு ஏணைய ஆற்றல் இருக்கிறது. டே ஒன் ஃபண்ட், தி பெசாஸ் எர்த் ஃபண்ட் போன்ற சில விஷயங்களில் ஈடுபட வேண்டிய நேரம் இது. ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பு இது இல்லை எனவும் நிர்வாக தலைவராக அமேசானில் தொடர்ந்து அங்கம் வகிப்பேன் எனவும் ஜெப் பெசோஸ் குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை
இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் வாழ்த்துகள், ஜெஃப் பெசோஸ் டே ஒன் மற்றும் எர்த் ஃபண்ட் ஆகியவற்றுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் ஆன்டி ஜெஸிக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக