Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 6 பிப்ரவரி, 2021

முடிஞ்சா இதுக்கு பதில் சொல்லுங்க... ரொம்ப ரோலிங் ஆகுதே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

------------------------------------------

அமலா : புகுந்த வீட்டுல பெண்கள மதிக்க மாட்டேங்குறாங்க.

விமலா : என்ன செய்றாங்க?

அமலா : மாமியார் மருமக சண்டைக்கு வாய்ப்புக் குடுக்காம எந்நேரமும் அப்பாவும் மகனும் சண்டை போடுறாங்க.

விமலா : 😆😆

------------------------------------------

தொண்டன் 1 : மக்கள் கூட்டத்தை பாத்ததும் தலைவருக்கு மேடை ஞாபகம் வந்து பேசி தொலைச்சிடுறாரு...

தொண்டன் 2 : அதுக்கு ஏன் சலிச்சிக்குற?

தொண்டன் 1 : ரோட்டுல டிராபிக் ஜாம் ஆனா கூட நின்னு பேச ஆரம்பிச்சுடுறாரே...

தொண்டன் 2 : 😛😛

------------------------------------------

கலைந்துள்ள சொற்களை கண்டுபிடிங்க...!!

------------------------------------------

1. நாறுனூபுற

2. வருத்ம்மதுத்தசி

3. பெஆருகுக்டிப்

4. நிமுவுழுல

5. குடுடுச

விடை :

1. புறநானூறு

2. சித்தமருத்துவம்

3. ஆடிப்பெருக்கு

4. முழுநிலவு

5. சடுகுடு

------------------------------------------

இதுக்கு முடிஞ்சா பதில் சொல்லுங்க..!!

------------------------------------------

1. ஒரு விமானம் இரு நாடுகளுக்கான எல்லையில் விபத்துக்குள்ளானது. விபத்தில் தப்பியவர்களை எந்த நாட்டில் அடக்கம் செய்ய வேண்டும்?

2. சிவப்பு மாளிகை இடப்பக்கத்திலும், நீல மாளிகை வலப்பக்கத்திலும், கருப்பு மாளிகை முன் பக்கத்திலும் இருப்பின் வெள்ளை மாளிகை எங்கிருக்கும்?

விடை :

1. உயிர் தப்பியவர்களை அடக்கம் செய்ய மாட்டார்கள். உயிரிழந்தவர்களையே அடக்கம் செய்வார்கள்.

2. அமெரிக்காவின் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை இருக்கும்.

------------------------------------------

ரொம்ப ரோலிங் ஆகுதே...!!

------------------------------------------

தொடை தட்டி சவால் விட்டு, வடை சுட்டுக் கடை போட்டு விற்று, தடை நீங்க விடை கிடைத்து, புடை சூழ குடை பிடித்து நடைபோட்டு போனபோது, பீடை மோத பாடையில் சென்றான்.

வட்டம் பெரிய வட்டம், கட்டம் சிறிய கட்டம். கட்டம் போடுது கொட்டம், வட்டம் போடுது சட்டம். வட்டம் இல்லை கட்டம், கட்டம் இல்லை வட்டம். வட்டம் வட்டம், கட்டம் கட்டம், இது திட்டவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!