Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

ஆசையே துன்பத்துக்கு காரணம்... சிரிக்கலாம் வாங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

-------------------------------------------------

டாக்டர் : 37ம் நம்பர் படுக்கையில் இருந்த பேஷண்ட் எப்படியிருக்காரு?

நர்ஸ் : அவருக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குது... டாக்டர்..

டாக்டர் : ஏன்? என்ன ஆச்சு அவருக்கு?

நர்ஸ் : என்னைப் பிடிக்க ரூம் முழுவதும் சுற்றி ஓடியதால் ஏற்பட்ட களைப்பு!

டாக்டர் : 😖😖

-------------------------------------------------

ராமு : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

சோமு : எப்படி?

ராமு : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே... கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

சோமு : 😛😛

-------------------------------------------------

தன்னம்பிக்கை வரிகள்...!!

-------------------------------------------------

உங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. எண்ணங்கள் உங்களை கட்டுப்படுத்த அனுமதிப்பதை நீங்கள் நிறுத்த வேண்டும். அப்போது வாழ்வில் அதிகம் கற்றுக்கொள்ளலாம். 

மனம் ஒரு தோட்டம்... எண்ணங்களே அங்கு விதைகள். அதில் மலர்களை வளர்ப்பதும், களைகளை வளர்ப்பதும் அவரவர் விருப்பம்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்கு நீங்களே ஆறுதல் கூறும் மனநிலையை பெற்று விட்டால், எவ்வளவு கடினமான பாதையையும் நீங்கள் கடந்து செல்ல முடியும்.

-------------------------------------------------

விடுகதைகள்...! 

-------------------------------------------------

👉 பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல்... அது என்ன?

👉 வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை... அவன் யார்?

👉 குரல் இல்லாதவன் கூப்பிடுகிறான்... அவன் யார்?

👉 மண்ணுக்குள் மட்காத கயிறு... அது என்ன?

விடை :

🐦 கிளி

📷 போட்டோ

📞 தொலைபேசி

🐛 மண்புழு

-------------------------------------------------

கை புதிர்கள்...!

-------------------------------------------------

துன்பத்தில் வரும் கை - அழுகை😭

அண்ணனின் இளைய சகோதரியை குறிக்கும் கை - தங்கை👫

பெண்ணை குறிக்கும் கை - மங்கை👩

சிவனின் தலையில் இருக்கும் கை - கங்கை🕉

தாத்தாவின் தலையில் தோன்றுவது - வழுக்கை👴

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!