Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

Skype ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

custom reaction picker-ஐயும் மேம்படுத்துகிறது

கொரோனா தொற்று காரணமாகப் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். வீட்டிலிருந்து அலுவலக தொடர்பான வீடியோ அழைப்புகளைப் பேசும் பொழுது நமக்குப் பின்னணியில் உள்ள வீட்டின் அறையின் மோசமான நிலையை மறைத்துக்கொள்ள ஸ்கைப் ஆனது பேக்கிரவுண்ட் ப்ளர் எனும் அம்சத்தை கொண்டுவந்தது.

ஆனால் முதலில் இந்த பேக்கிரவுண்ட் ப்ளர் அம்சம் ஆனது ஐஓஎஸ் இயங்குதள பயனர்களுக்கு கிடைத்தது. தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஸ்கைப் 8.68 அப்டேட் வழியாக இந்த அம்சத்தினை பெறமுடியும்.

custom reaction picker-ஐயும் மேம்படுத்துகிறது

அதேபோல் இப்போது வெளிவந்த ஸ்கைப் அப்டேட் ஆனது custom reaction picker-ஐயும் மேம்படுத்துகிறது. பின்பு டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கான பிற பக்ஸ்-களையும் சரிசெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேக்கிரவுண்ட் ப்ளர்

ஆண்ட்ராய்டு பயனர்களே நீங்கள் அடுத்த முறை வீடியோ அழைப்பில் இருக்கும்போது உங்கள் பின்னணியில் உள்ள பேக்கிரவுண்டை மங்கலாக கூடிய அம்சத்திற்கான பேக்கிரவுண்ட் ப்ளர் ஆப்ஷனை பயன்படுத்துங்கள்.

அண்மையில் வெளியான 9to5Mac தளம் அறிக்கையின்படி, ஐஒஎஸ் பயனர்களுக்கு இந்த பேக்கிரவுண்ட் ப்ளர் அம்சம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிடைத்தது. ஆனால் தற்போது தான் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0

மேலும் வெளியான தகவலின்படி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஸ்கைப்பில், இந்த அம்சம் தடையின்றி இயங்குவதற்கு அவர்கள் ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் அதற்கு மேலான இயங்குதளத்தை கொண்டிருக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்கள் ஸ்கைப்பில் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த, வீடியோ அழைப்பின் போது காண்பிக்கப்படும் ஐகானில் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, More என்ற மெனுவை தேர்வுசெய்யவும். அடுத்து Blur my background என்பதை தேர்வு செய்தால் போதும்.

விரைவில் ஸ்கைப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளியாகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு அம்சங்கள் இதில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக