Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 8 பிப்ரவரி, 2021

இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடியுங்க... கொஞ்சம் யோசிங்க பாஸ்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

--------------------------------------------------------------

இது சிரிப்பதற்கான நேரம்...! 

--------------------------------------------------------------

ராமு : கையில பத்து பைசாக்கூட இல்ல.... நா எப்படிதான் அடுத்த வாரம் என்னோட பொண்ணு கல்யாணத்த நடத்த போறன்னு தெரியல?

சோமு : அட ஏன்டா கவலைப்படுற... இந்தா பத்து பைசா... போயி உன்னோட பொண்ணு கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்து.

ராமு : 😖😖

--------------------------------------------------------------

மனைவி : நான் காலேஜ் படிக்கும் போது மாறுவேட போட்டியில அரக்கி வேஷம் போட்டதுக்கு... எனக்கு ரெண்டாவது பரிசுதான் கிடைச்சுது.

கணவன் : அட... நீ சும்மா போயிருந்தாலே முதல் பரிசு கொடுத்துருப்பாங்களே.

மனைவி : 😏😏

--------------------------------------------------------------

கொஞ்சம் யோசிங்க பாஸ்...!

--------------------------------------------------------------

நீங்கள் ஒரு சிறைக்கைதி, உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய விளையாட்டை விளையாடுவதன் மூலம் உயிர் பிழைத்துக் கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

 

50 வெள்ளை கோலிக்குண்டுகள், 50 கருப்பு கோலிக்குண்டுகள், மேலும் இரண்டு காலி கிண்ணங்கள் உங்களிடம் கொடுக்கப்படுகின்றன.

 

இரண்டு காலி கிண்ணங்களில் இந்த கோலிக்குண்டுகளை பிரித்து போட வேண்டும். அனைத்து கோலிக்குண்டுகளையும் பயன்படுத்தி நீங்கள் அதை எவ்வாறு வேண்டுமென்றாலும் பிரித்துக் கொள்ளலாம்.

 

உங்கள் கண்களை கட்டி, அந்த கிண்ணங்கள் வேறு இடத்திற்கு மாற்றிவிடப்படும். பிறகு ஒரு கிண்ணத்தை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு கோலிக்குண்டை எடுக்க வேண்டும்.

 

நீங்கள் எடுத்த கோலிக்குண்டு வெள்ளை நிறமாக இருந்தால் நீங்கள் உயிர் வாழ்வீர்கள். ஆனால், கருப்பாக இருந்தால் நீங்கள் இறந்து விடுவீர்கள்.

 

நீங்கள் வெள்ளை கோலிக்குண்டை தேர்ந்தெடுக்க ஏதுவாக கோலிக்குண்டுகளை எவ்வாறு பிரிப்பீர்கள்?

விடை:

 

ஒரே ஒரு வெள்ளை கோலிக்குண்டை ஒரு கிண்ணத்திலும், மற்ற கோலிக்குண்டுகளை இரண்டாம் கிண்ணத்திலும் (50 கருப்பு கோலிக்குண்டுகளை கீழேயும், 49 வெள்ளை கோலிக்குண்டுகளை மேலேயும்) போட்டு விடுங்கள்.

 

இம்மாதிரியாக செய்தால் நீங்கள் வெள்ளை கோலிக்குண்டை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு 50ஃ50 சதவீதம் உண்டு.

 

நீங்கள் மற்றொரு கிண்ணத்தை தேர்ந்தெடுத்தாலும், அதில் உள்ள 49 வெள்ளை கோலிக்குண்டுகளில் ஒன்றை எடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!