Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 பிப்ரவரி, 2021

முல்தானி மட்டியை எந்தெந்த சருமத்துக்கு எப்படி பயன்படுத்தணும்... முகம் கலராக எதோட கலந்து யூஸ் பண்ணணும்...

முல்தானி மெட்டியால் கிடைக்கும் 10 அழகு நன்மைகள்!!! | Top 10 Benefits of Multani  Mitti - Tamil BoldSky

முக அழகு பராமரிப்பிற்கு என பெண்கள் சலூன், பியூட்டி பார்லர் என பல்வேறு இடங்களுக்கு சென்று பணத்தை, தண்ணீர் போன்று செலவழிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், பண விரயத்தை கட்டுப்படுத்த உதவுகிறது, இது போன்ற பல எண்ணற்ற பலன்களை தரும் முல்தானி மட்டியை நாம் எவ்வாறு நமது முக அழகை பராமரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படுத்தலாம் என விளக்குகிறது இந்த இந்த கட்டுரை

ஆண்களுக்கு நிகராக, பெண்களும் தற்போது பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். பல்வேறு பொதுஇடங்களுக்கு அவர்களும் தற்போது செல்ல துவங்கியுள்ளதால், தங்களது முகம் மற்றும் உடல் பராமரிப்பு விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாகி உள்ளது. முல்தானி மட்டி போன்ற இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே, முக அழகு பராமரிப்பில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பயன்பாட்டால், குறைந்த பணம் செலவாவது மட்டுமல்லாது, கால விரயமும் பெருமளவு தடுக்கப்படுகிறது.

​முல்தானி மட்டிபேஸ் பேக் நன்மைகள்

முல்தானி மட்டி, சிறந்த மட்டுமல்லாமல் இயற்கையான முகம் மற்றும் உடல் அழகு பராமரிப்பு பொருளாக விளங்கி வருகிறது.

எண்ணய் சருமம் கொண்டவர்கள், முகப்பரு, பருக்களால் முகப்பொலிவை இழந்தவர்கள், உலர் சருமம் கொண்டவர்கள் என எல்லா பிரிவினருக்கும் முல்தானி மட்டி சிறந்த இயற்கை வரப்பிரசாதமாக விளங்குகிறது. முடி பராமரிப்பிற்கும் முல்தானி மட்டி பேருதவி புரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

​எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு

எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு, எப்போதும் அவர்களது முகத்தில் எண்ணெய் வழிந்தோடுவது போன்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். அவ்வாறு அதிகப்படியான எண்ணயை உறிஞ்சி முகம் சீராக இருக்க உதவுகிறது. இதன் அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சும் தன்மையால், முகத்தில் உள்ள துளைகளில் படிந்துள்ள அழுக்குகள் உள்ளிட்ட மாசுக்கள் நீக்கப்படுகின்றன. முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

​எண்ணெய் பசை நீங்க

 

முகத்தில் கரும்புள்ளி மற்றும் பருக்கள் ஏற்படுவதை தடுக்கிறது. முகத்திற்கு குளுமை உணர்வு அளிப்பதோடு மட்டுமல்லாது, பொலிவுற செய்கிறது.

முல்தானி மட்டி பவுடருடன் பன்னீரை சேர்த்து பயன்படுத்தி வர, எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதோடு மட்டுமல்லாது, முகத்தின் துளைகளில் உள்ள மாசுக்களை அகற்றுகிறது.

​எலுமிச்சை சாறு, பன்னீர் முல்தானி மட்டி பேஸ் பேக்

 

ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடருடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின் சுத்தமான நீரால் முகத்தை கழுவவும்

வாரம் இருமுறை, இதை செய்துவந்தால் முகத்தில் நல்ல மாற்றங்களை பெற முடியும்.

​வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு....

 

வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, முல்தானி மட்டி பவுடர், அவர்களின் முகத்திற்கு கிளின்சர் ஆக பயன்படுகிறது. அவர்களின் முகத்தில் உள்ள துளைகளில் படிந்துள்ள மாசுக்களை அகற்ற பயன்படுகிறது. தேன், பால், கிரீம் போன்றவைகளை மாய்ஸ்சுரைசிங் ஏஜென்ட் ஆக இவர்கள் பயன்படுத்தலாம்.

​தேன் - முல்தானி மட்டி பேஸ்பேக்

 

ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடருடன், ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருக்கவும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவும். வாரம் இருமுறை இதை செய்துவந்தால் நல்ல பலனை காணலாம்.

​முகப்பருக்களை அழிக்கும் முல்தானி மட்டி

 

முல்தானி மட்டி, முகத்தில் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. முகத்தில் உள்ள துளைகளில் மாசுக்கள் தங்குவதன் மூலம், அங்கு பாக்டீரியா பல்கிப்பெருகி, முகப்பரு போன்ற முகத்தின் அழகை குறைக்கும் நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. தக்காளி உள்ளிட்ட அமிலத்தன்மை கொண்ட உணவு வகைகள், முகத்தில் ஏற்படும் தழும்பு போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணமாக அமைகிறது.

​தக்காளி கலந்த முல்தானி மட்டி பேக்

 

1 தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடருடன், 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி சந்தனப் பொடி மற்றும் 2 தேக்கரண்டி தக்காளி சாற்றை கலக்கவும். இந்த கலவையை, முகத்தில் பருக்கள் மற்றும் தழும்பு உள்ள இடங்களில் தடவவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊறவைத்த பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதேபோன்று வாரம் 3 முறை செய்தால், நல்ல பலனை பெறலாம்.

​முகப்பொலிவிற்கு பப்பாளி

 

பப்பாளி, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவற்றை நீக்க பயன்படுகிறது. பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்சைம், முகத்தின் துளைகளில் உள்ள அசுத்தங்களை நீக்குவதோடு மட்டுமல்லாது, முகத்தில் உள்ள இறந்த செல்களையும் அகற்றுகிறது. பப்பாளி, முல்தானி மட்டி உடன் இணைந்து பயன்படுத்தும் போது அளப்பரிய நன்மைகள் கிடைக்கிறது.

ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடருடன், 1 தேக்கரண்டி, பப்பாளி பழத்தை சேர்த்து பேஸ்ட் போன்று ஆக்கிக் கொள்ளவும். இதை, முகத்தில் சீராக தடவிக் கொள்ளவும்

இது முழுவதுமாக உலரும் வரை காத்திருக்கவும்.

பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்

வாரம் 2 அல்லது 3 முறை இதை செய்து வந்தால், மிக விரைவில் முகம் பொலிவுறுவதை காணலாம்.

முகத்தில் தோன்றும் பழுப்பு வடுவை நீக்கவல்ல முல்தானி மட்டி முல்தானி மட்டியை, இளநீர் கலந்து பயன்படுத்துவதன் மூலம், சூரியக்கதிர்கள் நீண்ட நேரம் முகத்தில் படுவதால் ஏற்படும் பழுப்பு வடுக்கள், இருண்ட நிழல் போன்றவைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இளநீரில் உள்ள முக்கிய ஆன்டி ஆக்சிடெண்ட் ஆன வைட்டமின் சி, சூரிய ஒளிியால் முகத்திற்கு ஏற்படும் எரிச்சலையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

​இளநீர் – முல்தானி மட்டி பேஸ் பேக்

 

ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடருடன், 2 தேக்கரண்டி இளநீரை கலந்து கொள்ளவும்.

முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருக்கவும்.

பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

வாரத்திற்கு 3 முதல் 4 முறை இதை செய்துவர நல்ல பலனை கண்கூடாக காணலாம்.

​கருவளையத்தை நீக்கும் வெள்ளரி

 

வெள்ளரி சாற்றில் உள்ள ஆஸ்டிரின்ஜென்ட் தன்மையானது, முல்தானி மட்டியுடன் இணையும் போது, அது முகத்திற்கு குளுமை உணர்வை அளிப்பதோடு மட்டுமல்லாது, கண்களுக்கு அருகே ஏற்படும் கருவளையத்தை நீக்க பயன்படுகிறது.

வெள்ளரி – முல்தானி மட்டி பேஸ் பேக்

ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடருடன், 3 தேக்கரண்டி வெள்ளரி சாற்றை கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை,. கருவளையம் உள்ள பகுதியில் தடவி 20 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதை வாரத்திற்கு 3 முறை செய்துவந்தால், கருவளையங்களிலிருந்து விரைவில் விடுபட முடியும்.

​கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 

முல்தானி மட்டியை தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்த கூடாது. இதை அதிகளவு பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள நீர்ச்சத்து அதிகப்படியாக குறைந்து சருமம் உலர துவங்கி விடும்

முல்தானி மட்டி அனைவருக்கும் ஏற்றது என்று சொல்லிவிட முடியாது. இது சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தி விடும் என்பதால், தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் ஆலோசனை செய்தபிறகே இதை பயன்படுத்த வேண்டும். முல்தானி மட்டி, சிலருக்கு சருமத்தில் எரிச்சல் போன்ற உபாதைகளை ஏற்படுத்தி விடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

முல்தானி மட்டி வாயினுள் சென்று விட்டால், அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிடும். இது தசை பலவீனம் மற்றும் தோல் உபாதைகளை ஏற்படுத்தி விடும். எக்காரணத்தை கொண்டும், முல்தானி மட்டியை எந்த வடிவத்திலும் சாப்பிட்டு விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருத்தல் வேண்டும்.

·          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக