Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 23 மார்ச், 2021

வெறும் ரூ.1499 விலையில் சூப்பரான போல்ட் AirBass Z1 TWS இயர்பட்ஸ்.. எங்கே வாங்கலாம்?

புதிய போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இசட் 1 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்

போல்ட் ஆடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 'ஏர்பாஸ் இசட் 1' TWS என்ற ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை இந்தியச் சந்தையில் நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இசட் 1 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் பிளாக், ப்ளூ மற்றும் வைட் நிறத்தில் அமேசான் வழியாக இப்போது விற்பனைக்கு வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்ச தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

புதிய போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இசட் 1 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்

மேம்பட்ட கேமிங் அனுபவத்திற்கான லோ-லேடென்சி, ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஸ்மார்ட்போன் அணுகலுக்கான வாய்ஸ் கட்டுப்பாடு, கூடுதல் பாதுகாப்பிற்கான IPX5 சான்றிதழ் மற்றும் 24 மணி நேர பேட்டரி ஆயுள் ஆகிய பல முக்கிய அம்சங்களுடன் இந்த புதிய போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இசட் 1 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இசட் 1 சாதனம் நீடித்த பயன்பாட்டிற்காக இலகுரக பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

நாய்ஸ் கேன்சலேஷன் வடிவமைப்பு

கூடுதலாக, ஐபிஎக்ஸ் 5 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன், இயர்பட்ஸ்களுக்கு லேசான சிலிக்கான் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இது மழை நேரத்திலும் மற்றும் உடற்பயிற்சிகளின்போது அணியக் கூடிய வகையில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான வடிவமைப்பு நாய்ஸ் கேன்சலேஷன் செய்ய உதவுகிறது, இது சுற்றுப்புற சத்தத்தைத் தடுக்கிறது, இதனால் உங்கள் இசை அனுபவம் மேம்படுகிறது.

மலிவு விலையில் TWS அனுபவம்

அதேபோல், உங்களின் ஆடியோ மற்றும் வீடியோக்களை ரசிக்க மிகத் துல்லியமான அனுபவத்தை வழங்க இதில் 10mm டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான அழைப்புகளின் போது தடையின்றி இருக்க இதில் மைக் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இசட் 1 சாதனம் புளூடூத் வெர்ஷன் 5.0 இல் இயங்குகிறது. இதனால் ஏர்பாஸ் இசட் 1 இணைக்கப்பட்ட சாதனத்துடன் விரைவாக 10 மீட்டர் தூரத்திற்கு இணைக்க முடியும்.

சார்ஜிங் மற்றும் பிளேபேக் நேர விபரம்

ஏர்பாஸ் இசட் 1 ஒரே சார்ஜிங்கில் 8 மணிநேரம் வரை இயங்க கூடிய பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதன் சார்ஜிங் கேஸ் உங்களுக்கு மூன்று மணிநேரம் சார்ஜ் செய்யக் கூடிய சக்தியை வழங்குகிறது. இது உங்களுக்கு மொத்தம் 24 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. போல்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு நாளைக்குச் சராசரியாக 4 மணிநேரம் பயன்படுத்துவதன் மூலம் முழு சார்ஜ் உடன் Z1 உங்களை ஒரு வாரம் முழுவதும் நீடிக்கச் செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஹால் ஸ்விட்ச் தொழில்நுட்பம் என்ன செய்ய அனுமதிக்கும் தெரியுமா?

Boult Audio AirBass Z1 TWS earbuds, ஹால் ஸ்விட்ச் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, இது கேசின் மூடியைத் திறக்கும் போது உங்கள் ஸ்மார்ட்போனுடன் உடனடியாகவும் தானாகவும் இணைக்க உதவுகிறது. கூடுதலாக, Z1 இயர்பட்ஸ் சாதனத்தை தனித்தனியாகப் பயன்படுத்தலாம், அதாவது நீங்கள் இதை மோனோ பயன்முறையிலும் பயன்படுத்தலாம் என்பதே இதன் சிறப்பு. இந்த அம்சத்தின் மூலம், மற்றொன்றை சார்ஜிங் கேசில் இருந்து அகற்ற வேண்டிய அவசியமின்றி இடது அல்லது வலது இயர்பட்ஸை நீங்கள் பயன்படுத்தலாம். எனவே அவற்றை விரைவான ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகளுக்கு ஹெட்செட்களாகப் பயன்படுத்தலாம்.

விலை என்ன தெரியுமா?

இந்த அம்சம் முழு பேட்டரி ஆயுளையும் கிட்டத்தட்ட 48 மணி நேரம் நீட்டிக்க உதவுகிறது. கடைசியாக, ஒவ்வொரு இயர்பட்ஸ்களும் டச் கட்டுப்பாட்டுடன் வருகிறது. இதன் மூலம் நீங்கள் அழைப்புகளை நிர்வகிக்கலாம், இசை தடங்களை மாற்றலாம், வால்யூம் அளவை மாற்றலாம் அல்லது கூகிள் அல்லது சிரி அசிஸ்டன்ட் அம்சத்தை டச் மூலம் அணுகலாம்.இந்த புதிய Boult Audio AirBass Z1 TWS earbuds சாதனம் ரூ. 1499 விலையில், 21 மார்ச் 2021 முதல் அமேசான் மூலம் 1 ஆண்டு உத்தரவாதத்துடன் வாங்க கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக