Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 4 மார்ச், 2021

அமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது புதிய சர்ச்சை..!

ஹிட்லரின் மீசையும், சிரிப்பும்

இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு முன்னணி ஆன்லைன் ஆடை மற்றும் பேஷன் பொருட்கள் விற்பனை நிறுவனமான மிந்திரா நிறுவனத்தின் லோகோ பெண்ணின் உடலை குறிக்கும் வகையில் உள்ளது எனக் கருத்து சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவியது.

இதற்கு மக்கள் மத்தியிலும் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மிந்திரா நிறுவனம் தனது லோகோவை மாற்றியது

இதைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான்.காம் சமீபத்தில் வெளியிட்ட மொபைல் செயலியின் லோகோவில் பெரிய பிரச்சனை இருப்பதாக இதன் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமேசான் ஷாப்பிங் செயலி

அமேசான் நிறுவனத்தின் ஷாப்பிங் செயலி இந்தியா, அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகில் பெரும்பாலான நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் அமேசான் தனது ஷாப்பிங் செயலியைப் புதுப்பித்துப் புதிய லோகோ உடன் வெளியிட்டது.

அமேசான் பழைய லோகோ

பிரவுன் நிற பெட்டி மீது நீல நிற டேப் ஒட்டியதை போல் இருந்த லோகோவில் வழக்கம்போல் அமேசானின் ஸ்மைல் ஏரோ சிம்பள்-ம் இடம்பெற்று இருந்தது. இதில் என்ன இருக்கு என நீங்கள் நினைக்கலாம்.

ஹிட்லரின் மீசையும், சிரிப்பும்

ஆனால் இந்த லோகோவை பார்த்த பலரும் ஹிட்லரின் குட்டி மீசையும் அவர் சிரிப்பதும் போன்று இந்த லோகோ இருப்பதாக சமுக வலைத்தளத்தில் கருத்துப் பதிவிடப்பட்டது. இதைப் பலரும் ஒப்புக்கொண்டு தொடர்ந்து பகிரப்பட்டு வைரலானது.

ஹிட்லரின் டூத்பிரஷ் மீசை

டூத்பிரஷ் மீசை என அழைக்கப்படும் இந்த ஹிட்லர் மீசை-க்குப் பின் சோகமான வரலாறு இருக்கும் காரணத்தால், மக்கள் இந்த லோகோவிற்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். 1900களில் ஹிட்லரின் மீசையைச் சார்லி சாப்ளின் வைத்ததன் மூலம் இந்த ஸ்டைல் மீசை பிரபலமானது.

தொடரும் விமர்சனம்

உலகம் முழுவதும் எழுந்த இந்த எதிர்ப்புகளை ஏற்ற அமேசான் நிறுவனம் உடனடியாக லோகோ-வை மாற்றியது. ஆனால் புதிதாக மாற்றிய லோகோ-வில் நீல நிற ஸ்டிர்ப்-க்கு பதிலாக ஏரோ ஸ்டிக்கி நோட் இருப்பது போன்று மாற்றப்பட்டது ஆனால் இது தி லாஸ்ட் ஏர்பென்டர் காமிக்ஸ்-ல் வரும் ஆங்க் போல உள்ளது எனத் தற்போது விமர்சனம் செய்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக