
இந்தியாவில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் தனது வர்த்தக வளர்ச்சிக்காகவும், கடன் அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக ஐபிஓ மூலம் முதலீட்டை ஈர்க்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் யார் முதலில் ஐபிஓ வெளியிடப் போவது என்பதில் தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பல முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே அதிகளவிலான வர்த்தக நெருக்கடியில் இருக்கும் நிலையில் ஐபிஓ தோல்வி அடைந்தால் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சோமேட்டோ அதிரடி
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது ரிஸ்க் எடுக்கத் தயங்கி வரும் நிலையில், நாட்டின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ இந்திய ஸ்டார்ட்அப் சந்தையின் முதல் நிறுவனமாக ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.
1 பில்லியன் டாலர் இலக்கு
தீபிந்தர் கோயல் தலைமை வகிக்கும் சோமேட்டோ நிறுவனம் இந்த ஐபிஓ மூலம் எந்த முதலீட்டாளர்களையும் இழக்கக் கூடாது என்ற முக்கியமான குறிக்கோள் உடன் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த ஐபிஓ மூலம் 750 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.
டோர்டேஷ் வெற்றி
அமெரிக்காவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான டோர்டேஷ் அமெரிக்கப் பங்குச்சந்தையில் வெற்றிகரமாக ஐபிஓ வெளியிட்டுள்ளது. இதிலும் முக்கியமாக ஐபிஓ விலையை விடவும் 78 சதவீதம் அதிகமான விலை அதாவது 182 டாலருக்குப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
ஸ்விக்கியின் திட்டம்
இதன் எதிரொலியா சோமேட்டோ நிறுவனம் ஐபிஓ வெளியிட நம்பிக்கை பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவில் தனது சக போட்டி நிறுவனமான ஸ்விக்கி வர்த்தக விரிவாக்கத்திற்காக 800 மில்லியன் டாலர அளவிலான முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு உள்ள நிலையில், இந்தப் போட்டியைச் சமாளிக்க ஐபிஓ சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறது சோமேட்டோ நிர்வாகம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக