ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி, மூன்று ரியர் கேமரா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி ஜிடி 5ஜி
அதேபோல் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் tone வேகன் லெதர் டிசைனை வெளிப்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
ஆண்ட்ராய்டு 11
இந்த ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
64எம்பி பிரைமரி கேமரா
ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
5000 எம்ஏஎச் பேட்டரி
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே 35 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ப்ளூ, கிரே, லெதர் போன்ற நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி
கொண்ட ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.31,440-ஆக உள்ளது.
அதேபோல் இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை (இந்திய
மதிப்பில்) ரூ.37,000-ஆக உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக