--------------------------------------
கடி ஜோக்ஸ்...!!
--------------------------------------
கவுண்டமணி : ஏன்டா... எறும்பு பவுடர் வாங்கிட்டு வரல?
செந்தில் : என்ன அண்ணே நீங்க... விவரம் தெரியாம இருக்கீங்களே... இன்னைக்கு பவுடர் வாங்கி கொடுத்தா... நாளைக்கு லிப்டிக் கேக்கும்... இதெல்லாம் சரியா வராதுண்ணே...
கவுண்டமணி : 😄😄
--------------------------------------
கடவுள் : பக்தா... என்ன வரம் வேண்டும் கேள்?
பக்தன் : நான் சாப்பிடும் போதெல்லாம் கரண்ட் போயிடணும்.
கடவுள் : ஏன்?
பக்தன் : நான் சாப்பாடு கேட்டா... என் மனைவி சீரியல் முடியட்டும்-னு சொல்றா... அதான்.
கடவுள் : 😂😂
--------------------------------------
இந்த டவுட் உங்களுக்கும் இருக்கா?
--------------------------------------
நடப்பதெல்லாம் நன்மைக்கே-னு சொல்றாங்களே...
எத்தனை கிலோமீட்டர் நடந்தா நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?🤔🤔
--------------------------------------
பயனுள்ள குறிப்புகள்...!!
--------------------------------------
தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும்.
மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைகளை போக்க, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து பின் சோப்பு போட்டு அலசினால் கறை போய்விடும்.
ஊதுபத்தியை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால் அதிக மணமாகவும் இருக்கும், நன்றாகவும் எரியும்.
பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது. மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக