Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 21 ஏப்ரல், 2021

திணறக்கூடாது.. நிறுத்துக்கூடாது.. நீங்க ரெடியா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!! 

-------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் : உன்னை வரிசையில கடைசிலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?

மாணவன் : கடைசில ஏற்கனவே வேற ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்..

ஆசிரியர் : 😐😐

-------------------------------------------------------------------------------------------

குமார் : எனக்கு நாக்குல புண் வந்திருக்குன்னு நான் சொல்லாமலே என் மனைவி கண்டுபிடிச்சிட்டா...!

சுகுமார் : எப்படி..?

குமார் : அது தெரியலை... ஆனா என்னை கரெக்டா 'புண்ணாக்கு... புண்ணாக்கு"னு கூப்பிடறாளே..!

சுகுமார் : 😆😆

-------------------------------------------------------------------------------------------

இது எப்படி இருக்கு?

-------------------------------------------------------------------------------------------

குகைக்குள்ளிருந்து பரபரப்புடன் தன் கணவரை நோக்கி ஓடி வந்தாள் அந்த ஆதிவாசிப் பெண்.

'ஆபத்து! என் அம்மா தங்கியிருக்கும் குகைக்குள் ஒரு புலி வந்துவிட்டது. காப்பாற்றுங்கள்" என்று அலறினாள்.

அவள் கணவன், 'நான் என்ன செய்ய முடியும்? புலிக்கு அதிர்ஷ்டமிருந்தால் தப்பிப் பிழைக்கட்டும்" என்றான் அமைதியாக😎😌😇

-------------------------------------------------------------------------------------------

டங்கு ஸ்லிப் ஆகுதா?

-------------------------------------------------------------------------------------------

ஆனை அலறலோடு அலற அலறியோட.

சைக்கிள் ராலி போலொரு லாரி ராலி.

துள்ளும் கயலோ வெள்ளம் பாயும் உள்ளக் கவலை எள்ளிப் போகும்.

-------------------------------------------------------------------------------------------

தமிழ் அகராதி...!!

-------------------------------------------------------------------------------------------

அக்னி நட்சத்திரம் - எரிநாள்

அங்கவஸ்திரம் - மேலாடை

அங்குலம் - விரலம்

அசரீரி - உருவிலி

அஞ்சலி - கும்பீடு, இறுதி வணக்கம்

-------------------------------------------------------------------------------------------

இன்றைய புதிர்...!!

-------------------------------------------------------------------------------------------

இதற்கு இலையிருக்கும் ஆனால் கிளை இருக்காது.

பூ இருக்கும் ஆனால் மணம் இருக்காது.

காய் இருக்கும் ஆனால் விதை இருக்காது.

கன்று இருக்கும் ஆனால் அது பசு அல்ல. அது என்ன?

.

.

.

.

.

வாழைமரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!