-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடைய பையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.
'இவன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னு தெரியலை"
ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
'நாலு வாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்"
'ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்..."
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத் தூக்கிக் குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசு வெளியே வரவில்லை.
அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார். பையனைத் தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார்.
காசு வெளியே வந்து விழுந்தது.
எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண் நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.
'சார் நீங்க டாக்டருங்களா?"
'இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படி தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?
-------------------------------------
ரகசியம்...!!
-------------------------------------
👴 எல்லோரும் 100 வயதான ஒரு மனிதரிடம் அவரது உடல்நல ரகசியங்களை கேட்டார்கள்...
👴 முதியவர் சொன்னார்... நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். எனக்கு திருமணமாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. திருமணம் செய்துகொண்ட போது நாங்கள் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். இரண்டு பேர் சண்டையிடும் போது, தோல்வியுற்றவர் 5 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்று. 75 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வருகிறேன்!
👴 மற்றவர்கள் கேட்டனர்... ஆனால் உங்கள் மனைவியும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
👴 முதியவர் பதிலளித்தார்... இன்னொரு ரகசியத்தைச் சொல்கிறேன். அவள் என்னைப் பின்தொடர்ந்தாள்... நான் 5 கிலோமீட்டர்களை முடிக்கிறேனா என்பதை உறுதிப்படுத்த!
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. ஆயசஉh மாதத்திற்கும் யுpசடை மாதத்திற்கும் மத்தியில் என்னை காண முடியும். ஆனால் மாதத்தின் ஆரம்பத்திலோ, இறுதியிலோ என்னை காண முடியாது. நான் யார்?
2. இதற்கு 6 முகங்கள் உண்டு. ஆனால் அலங்காரம் செய்ததில்லை. 21 கண்கள் உண்டு. யாரையும் பார்த்ததில்லை. அது என்ன?
3. இரு தந்தையரும், இரு மகன்களும் மீன் பிடிக்க சென்றனர். அவர்களால் மூன்று மீன்களையே பிடிக்க முடிந்தது. ஆனாலும் ஆளுக்கொரு மீனை பகிர்ந்து கொண்டனர். இது எப்படி சாத்தியம்?
-------------------------------------
விடை :
-------------------------------------
1. எழுத்து சு
2. தாயக்கட்டை
3. மூவரும்-மகன், தந்தை, பாட்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக