கூகுள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதே சமயம் புதிய புதிய சேவைகளையும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது இந்நிறுவனம். இந்நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் கூகுள் ஸ்டோரேஜில் புகைப்படங்களை சேமிப்பதில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது கூகுள் நிறுவனம்.
அதேபோல் இந்நிறுவனம் கூகுள் ஒன் என்ற மாத சந்தாவையும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நாம் எடுக்கும் பல்வேறு புகைப்படங்களை கூகுள் ஸ்டோரேஜில் சேமித்து வைத்துக்கொள்ளலாம், இந்த வசதியை இலவசமாக வழங்கி வந்த கூகுள் நிறுவனம், தற்போது உயர்தரமான புகைப்படங்களுக்கு இலவச ஸ்டோரேஜ் நிறுத்துவதாக கூறியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு வரும் ஜூன் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கி வரும் 15ஜிபி இலவச ஸ்டோரேஜில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.
ஆனாலும் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 15ஜிபிக்கு அதிகமாக இருந்தால் கூகுள் ஒன் சந்தாவில் கண்டிப்பாக இணைந்தாக வேண்டும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வரும் ஜூன் 1ம் தேதிக்குப் பிறகு 15ஜிபிக்குள் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டுமே கூகுள் ஸ்டோரேஜில் இருக்கும். பின்பு மாத சந்தாவில் இணையவில்லைஎன்றால் ஸ்டோரேஜில் இருக்கும் தகவல்கள் அழிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
Google One (கூகுள் ஒன்) அடிப்படை சந்தா 100ஜிபி திட்டத்துடன் துவங்குகிறது, இதற்கு மாதத்திற்கு 130, ஆண்டுக்கு ரூ.1,300 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 200ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது, இந்த திட்டத்தில் மாதம் ரூ.210,ஆண்டுக்கு ரூ.2100 கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின்பு 2டிபிக்கு (2 TB) மாதத்திற்கு ரூ.650, ஆண்டுக்கு ரூ.6,500 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10டிபி ஸ்டோரேஜ் திட்டத்தில் மாதம் ரூ.3250 செலுத்த வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஒஎஸ் செயலி வெர்சன்களிலும் கூகுள் ஒன் ஸ்டோரேஜ் கட்டணம் முறை கொண்டுவரப்படுகிறது. ஆனால் ஐஒஎஸ் வெர்சன் செயலிகளுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி ஐஒஎஸ் வெர்சன் செயலிகளின் அடிப்படை கூகுள் ஒன் சந்தாவின் விலை மாதம் ரூ.149, ஆண்டுக்கு ரூ.1499-ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்பு 200ஜிபி மற்றும் 1 TB திட்டங்களுக்கும் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக