Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 17 மே, 2021

கமல் ஹாசனுக்கு வில்லனாகும் மக்கள் செல்வன்..!!


விக்ரம் படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 



தமிழ் சினிமாவில் மாநகரம் , கைதி, மாஸ்டர் என மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடித்துவிட்டு படத்தை தீபாவளி அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.


இந்த நிலையில் அந்த தகவல் தற்போது உறுதியாகிவிட்டதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக