Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 3 மே, 2021

அதிக விலையில் நகை... பட்டு புடவை... மனைவியின் மீதுள்ள அன்பு... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------

கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!

-----------------------------------------------------

ராஜா என்பவர் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 

டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. அதை எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு, ஹலோ என்றார் ராஜா.

 

என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா? என்றது மறுமுனை.

 

எடுத்துக்கோ.. உனக்கு இல்லாத காசா...

 

இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒன்னு எடுத்துக்கிறேங்க...

 

ஒன்னு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..

 

சரிங்க.. உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்.. எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா?...

 

ஓக்கே டார்லிங்.. தாராளமா வாங்கிக்க.. என்று சொல்லிவிட்டு போனை மேஜையில் வைத்தார் ராஜா.

 

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியத்துடன்,

 

என்னடா இது உன் பொண்டாட்டிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட... நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி... என்றார்கள்.

 

ஆனால் அவரோ பக்கத்து மேஜையில் அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தார்,

 

எக்ஸ்கியூஸ் மி சார்... இந்த மொபைல் போன் யாரோடது...?😌😎😇

-----------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!