Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 3 மே, 2021

ரொம்ப ரோல் ஆகுதே.. நீங்களும் ட்ரை பண்ணுங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

----------------------------------------------------------------------------

 

நீதிபதி : பேங்ல பணத்த கொள்ளையடிச்ச சரி... போகும்போது மேனேஜர் வழுக்கைத் தலையில ஏன் ரெண்டு குட்டு குட்டின?

திருடன் : பணம் மட்டும் ஒரு மனுஷனுக்கு சந்தோஷத்தை கொடுத்துடாது எஜமான்.

நீதிபதி : 😆😆

----------------------------------------------------------------------------

அப்பா : எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?

மகன் : ஒன்னே ஒன்ணுதான்!

அப்பா : ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?

மகன் : மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!

அப்பா : 😐😐

----------------------------------------------------------------------------

அட அப்படியா?

----------------------------------------------------------------------------

 

🌟 நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்களில் இரண்டு வௌ;வேறு காட்சிகளைக் காண முடியும்.

 

🌟 வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.

 

🌟 நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.

 

🌟 உலகில் எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.

 

🌟 உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்ட இருபதா‌யிர‌ம் வகை ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உள்ளன.

----------------------------------------------------------------------------

தமிழ் அகராதி...!!

----------------------------------------------------------------------------

 

ஆஸ்திரேலியா - தென்கண்டம்

 

ஆபத்து - இடுக்கண், இடையூறு

 

ஆபரணம் - அணிகலன்

 

ஆப்பிள் - அரத்தி

 

ஆமோதி - வழிமொழி

 

ஆயத்தம் – அணியம்

----------------------------------------------------------------------------

ரொம்ப ரோல் ஆகுதே...!!

----------------------------------------------------------------------------

 

குரங்கின் வாலும் வாழைப்பழத் தோலும் நாயின் வாலும் சின்னப் பையன் வேலும். 

 

கோடு போட்ட வீடு கோலம் போட்ட வீடு வேப்ப மர சந்து வேணுகோபால் வீடு. 

 

பரதநாட்டியம் பரந்த நாடு பழைய நாட்டியம் பரதநாட்டியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக