Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 3 மே, 2021

காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது.. நான் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------------------

கலக்கலான காமெடி...!!

---------------------------------------------------------------------

பாபு : என்ன இது செருப்ப எல்லாம் செவுத்துல ஆணி அடிச்சு மாட்டி வெச்சிருக்கீங்க?

கோபு : சண்ட நேரத்துல கீழ குனிஞ்சு எடுக்க சிரமமா இருக்குன்னு என் மனைவி தான் இப்படி மாட்டி வெச்சிருக்கா...

பாபு : 😅😅

---------------------------------------------------------------------

ரமேஷ் : நேத்து சாயங்காலம் போன் பண்ணேன் ஏன்டா எடுக்கல?

சுரேஷ் : நான் வீட்டுக்கு போன உடனே என் பொண்டாட்டி சைலண்ட் மோட்ல போட்ருவா... அதான்.

ரமேஷ் : உன்னோட மொபைல உன் பொண்டாட்டி ஏன்டா சைலண்ட் மோடுல போடணும்?

சுரேஷ் : மொபைல இல்லடா... என்னையவே சைலண்ட் மோடுல போட்ருவா...

ரமேஷ் : 😂😂

---------------------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!

---------------------------------------------------------------------

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

பொருள் :

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

---------------------------------------------------------------------

மாவட்டங்களும்... சிறப்புகளும்...!!

---------------------------------------------------------------------

காஞ்சிபுரம் - கோயில்கள், பட்டு புடவைகள்.

செங்கல்பட்டு - ஏரிகள், வேடந்தாங்கல், மாமல்லபுரம் சிற்பங்கள்.

தர்மபுரி - ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி.

சேலம் - எஃகு, மா, மேட்டூர் அணை, ஏற்காடு.

ஈரோடு - மஞ்சள், கோதாவரி அணை, பவானி ரூ கொடுமுடி கோயில்கள்.

---------------------------------------------------------------------

நான் யார்?

---------------------------------------------------------------------

1. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?

.

.

.

.

.

📘புத்தகம்.

2. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது, இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?

.

.

.

.

.

🗾வரைபடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக