Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 3 மே, 2021

சோ-வென்று பெய்த மழை... மயங்கி விழுந்த டாக்டர்... என்ன நடந்தது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------------------

கலக்கலான காமெடி...!!

----------------------------------------------------------------

ஒருநாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒருவன் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டான்,

டாக்டர் வீட்டுக்கு வந்து நோயாளியை பார்க்க நீங்க எவ்வளவு பீஸ் வாங்குவீங்க என்று...?

அதற்கு டாக்டர் சொன்னார் 300 ரூபாய் வாங்குவேன் என்று.. உடனே அவன் டாக்டரிடம் அப்படியா சரி கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர் எங்க வீட்டிற்கு என்றான். டாக்டரும் அவனை தன்னுடைய காரில் அவன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போய் சேர்ந்தார்.

டாக்டர் வீட்டில் நுழைந்ததும் கேட்டார், நோயாளி எங்கே? என்று. அதற்கு அவன் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார். அப்படி என்ன தான் சொல்லிருப்பான் அவன்?

.

.

.

.

.

'நோயாளி எல்லாம் இங்க இல்லைங்க டாக்டர். இந்த மழைல ஆட்டோக்காரன் எல்லோரும் இங்க வர 500 ரூபாய் கேட்டாங்க. நீங்க வெறும் 300 ரூபாய் தான் கேட்டீங்க அதான்...!!" என்றான்.😩😩

----------------------------------------------------------------

சிறந்த வரிகள்...!!

----------------------------------------------------------------

🌟 நீதி என்பது நீங்கள் பிறரிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்வது. நேர்மை என்பது உங்களுக்கு நீங்களே ஒழுக்கமாக நடந்து கொள்வது.

🌟 எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்ல நினைக்காதீர்கள். அனைவருக்கும் கேட்க காதுகள் இருக்கும். ஆனால் மனசு இருக்காது. 

🌟 உங்களோடு இருப்பவர்களுக்கு ஓடமாக இருங்கள். உங்களை உதறிச் செல்பவர்களுக்கு பாடமாக இருங்கள். 

🌟 வாழும்போதே பிடித்தவர்களுடன் வாழ்ந்து விடுங்கள். வாழ்க்கையில் ஒத்திகைகளும் கிடையாது, சந்தர்ப்பங்களும் திரும்ப வராது.

----------------------------------------------------------------

விடுகதைகள்...!!

----------------------------------------------------------------

1. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன? 

2. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான். அவன் யார்? 

3. உடல் கொண்டு குத்திடுவான், உதிரிகளை ஒன்றிணைப்பான். அவன் யார்? 

4. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன? 

5. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள். அவள் யார்? 

6. கோடையிலே ஆடி வரும், வாடையிலே முடங்கி விடும். அது என்ன? 

----------------------------------------------------------------

விடை :

----------------------------------------------------------------

1. மரம் 

2. கொக்கு 

3. ஊசி 

4. ஈ

5. துடைப்பம் 

6. மின்விசிறி

----------------------------------------------------------------

பாரசீகம் – தமிழ்

----------------------------------------------------------------

1. மைதானம் - திறந்தவெளித் திடல்

2. ஜமக்காளம் - விரிப்பு

3. ஜமீன் - நிலபுலம்

4. மாலுமி - நாவாயோட்டி

5. பஜார் - கடைத்தெரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக