Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 14 மே, 2021

ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

யூடியூப்பில் தமிழ் திரைபடங்களை சரமாரியாக விமர்சித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவர் ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறியதாக வெளியில் தகவல் வெளிவந்துள்ளது. 


ப்ளூ சட்டை மாறனின் (Blue Sattai Maran) ஆன்டி இண்டியன் (Anti Indian) படத்தில் நரேன், ராதாரவி உள்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று கூறினர். இதையடுத்து மறு சென்ஸாருக்காக (Censor Board) படத்தை அனுப்பும் முடிவில் படக்குழுவினர் இருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் மத நல்லிணக்கத்தையும், அரசியல் நய்யாண்டியையும் கொண்டிருக்கும் படம் எனக் காட்டுகின்றன. மேலும் போஸ்டரில் ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் என அனைத்து குறியீடுகளும் இருப்பதால் படம் கண்டிப்பாக இந்திய அரசியலைப் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக இந்த போஸ்டரில் ப்ளூ சட்டை மாறன் அவருக்கு அவரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. 


இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என அனைத்துமே ப்ளூ சட்டை மாறன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக