Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 18 மே, 2021

இ-பாஸ், இ-பதிவு.! இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இது ரொம்ப முக்கியம் மக்களே.!

 


தமிழ்நாட்டில் இன்று மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய இ-பதிவு முறை ஆனது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் பரவல் அதிகரித்து வந்தது என்று தான் கூறவேண்டும். 

10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை  மேலும் கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது எனத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.   

மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இ-பதிவு முறையும், கடந்த வருடம் நடைமுறையிலிருந்த இ-பாஸ் முறையும் முற்றிலும் வெவ்வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  

இ-பாஸ் முறை 

இ-பாஸ் முறை  அதாவது இ-பாஸ் முறை ஆனது எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் போன்ற விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்பு நீங்கள் பதிவு செய்த விண்ணப்பத்தை அதிகாரிகள் சரிபார்த்து நாம் குறிப்பிடும் காரணம் அத்தியாவசிய காரணமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவார்கள், ஒருவேளை தேவையற்ற காரணங்களாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும்.  

இ-பதிவு முறை 

இ-பதிவு முறை  ஆனால் இப்போது கொண்டுவரப்பட்ட இ-பதிவு முறை ஆனது முற்றிலும் வேறுபட்டது. அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கு உள்ளேயோ செல்ல வேண்டும் என்றால் https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்த பின்பு அந்த நகலைஎடுத்துக்கொண்டு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த தடையுமின்றி செல்லலாம் என்று கூறப்படுகிறது. அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

புதிய இ-பதிவு முறை  அதாவது முக்கிய தேவைகளுக்காக செல்லக்கூடியவர்கள் இ-பாஸ் முறையில் அனுமதி கிடைக்காமல் காத்திருந்துசிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த புதிய இ-பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது

என்னென்ன அம்சங்கள்.! 

ஒருவேளை பயணம் செய்வோருக்கு தொற்று எற்பட்டால் அவர்களை உடனடியாக டிராக் செய்ய இந்த இ-பதிவு முறை உதவும் என்று கூறப்படுகிறது.எனவே அத்தியாவசிய பணிகாளன மருத்துவ சிகிச்சை, இறப்பு, திருமணம்,முதியோர்களுக்கான தேவை, நேர்காணல்போன்ற சில தேவைகளுக்கு மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இ-பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பதிவை https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  

3 பேர் பயணம் செய்ய அனுமதி 

இ-பதிவு மூலம் மக்கள் தங்களது அத்தியாவசிய பணியை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பின்பு இருசக்கர வாகனத்தில் ஒருவரும், காரில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக