Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 18 மே, 2021

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு யூஸர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - Gmail ஆப்பில் புதிய அப்டேட்!


நீங்கள் ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) பயன்படுத்துபவரா? அப்படியானால் உங்களுக்காக ஒரு நல்ல செய்தி ஒன்று உள்ளது. ஆப்பிள் ஐபோனில் Gmail app பயன்படுத்துபவர்களுக்காக ஒரு பெரிய மற்றும் புதிய அப்டேட் ஒன்று காத்திருக்கிறது.
 
 கூகுள் சேட் ஆப் (Google Chat app) இறுதியாக தனிப்பட்ட யூஸர்களின் பயன்பாட்டிற்காக iOS இயங்குதளத்திற்கு வந்துவிட்டது. இதுநாள் வரை Google Chat app, கூகுள் வொர்க் ஸ்பேஸ் யூஸர்களுக்கு (Google Workspace users) மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் இப்போது பர்சனல் அக்கவுண்ட்களுக்கும் கிடைக்கிறது.

Google Chat app-ஐ பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் Gmail app-ல், இந்த மெசேஜிங் app-ஐ ஒருங்கிணைப்பது ஆகும். மேலும் இது இப்போது Gmail app-ன் ஒரு பகுதியாக இருக்கும் மெயில், மீட் மற்றும் ரூம்ஸ் போன்ற பிற உள்பயன்பாடுகளுடன் இந்த தளம் இப்போது யூஸர்களுக்கு கிடைக்கும். 
 
அதாவது ஐபோன் மற்றும் ஐபேட் (iPhone and iPad) வாடிக்கையாளர்கள் இப்போது ஜிமெயில் இன்டர்ஃபேஸின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு ஆப்ஷன்களை காணலாம் மற்றும் பயன்படுத்தலாம்.

ஜிமெயில், சேட், மீட் மற்றும் ரூம்ஸ் (Gmail, Chat, Meet and Rooms) உள்ளிட்டவையே அவை. இருப்பினும், ஆண்ட்ராய்டில் உள்ள ஜிமெயில் app-ல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. 
 
ஆண்ட்ராய்டு யூஸர்கள் Google Chat app-ற்காக இன்னும் கொஞ்சம் நாள் காத்திருக்க வேண்டியிருக்கும்.இது முந்தைய Hangouts app-ஐ மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

கீழ்காணும் எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆப்பிள் ஐபோன், ஐபேட் அல்லது ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள ஜிமெயில் app-ல், Google Chat app விருப்பத்தை பயன்படுத்தலாம்:

* நீங்கள் Gmail app-ன் லேட்டஸ்ட் வெர்ஷனை தான் பயன்படுத்துகிறீர்களா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

* ஒருவேளை நீங்கள் பழைய வெர்ஷன் Gmail app-ஐ Google Play Store அல்லது App Store வழியே பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் சாதனத்தில் உள்ள Gmail app-ஐ அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

* பின்னர் அப்டேட் செய்த Gmail app-ற்கு சென்று, திரையின் மேல் இடதுபுறத்தில் உள்ள சாண்ட்விச் மெனுவை (sandwich menu) கிளிக் செய்து கொள்ளுங்கள்.

* இப்போது நீங்கள் செட்டிங்ஸ் (Settings) சென்று உங்கள் தனிப்பட்ட Google அக்கவுண்ட்டிற்கு செல்ல வேண்டும்.

* உங்கள் Gmail app-ற்கான மெசேஜிங் பிளாட்ஃபார்மை செயல்படுத்த சேட் ஆப்ஷனை (Chat option) தேர்வு செய்து கொள்ளுங்கள். Chat (early access) என்று இருப்பதை பச்சை நிறமாக மாற்றவும். இப்போது Gmail app-ஐ ரீஸ்டாரட் செய்யுங்கள். மேலும் ஸ்கிரீனின் அடிப்பகுதியில் நான்கு டேப்களை (tabs) காண்பீர்கள். இப்போது அதில் Chat ஆப்ஷன் கூடுதலாக இருக்கும்.

ஜூம் மற்றும் ஸ்லாக் போன்ற உடனடி செய்தி தளங்களுக்கான சேட் மற்றும் மீட்டிங் உள்ளிட்டவற்றிற்கு இந்த புதிய அப்டேட் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்றவற்றிற்கான போட்டியாகவும் இது இருக்கும் என்று கூகுள் நம்புகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக