Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 18 மே, 2021

லாக்டவுன்: வாரன்ட்டி, சர்வீஸ் காலத்தை நீட்டித்துள்ள வாகன நிறுவனங்கள்!

 


பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கார் மற்றும் பைக் வைத்திருக்கும் மக்கள் திட்டமிடப்படி தங்களது வாகனங்களை சர்வீஸிற்கு விட்டு பராமரிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 

முன்கள பணியாளர்கள் தவிர அரசு அனுமதித்துள்ள சில துறையை சார்ந்தவர்களே பல மாநிலங்களில் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கார் மற்றும் பைக் வைத்திருக்கும் மக்கள் திட்டமிடப்படி தங்களது வாகனங்களை சர்வீஸிற்கு விட்டு பராமரிக்க முடியாத நிலையில் உள்ளனர்.  

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, பல நாக்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதன் அனைத்து வாகனங்களுக்கும் உத்தரவாதம் எனப்படும் வாரன்ட்டி (warranty) மற்றும் வாகனத்தை பராமரிக்க வாகன சேவை அட்டவணை (vechile service schedule ) ஆகியவற்றை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன. 

இதில் ஒரு சில வாகன நிறுவனங்கள் வாகனத்திற்கான warranty-ஐ குறைந்தபட்சம் 1 மாதம் வரை நீட்டித்துள்ளனர், சில நிறுவனங்கள் அதிகபட்சம் 3 மாதங்கள் வரை warranty நீட்டிதுள்ளனர். 

இத்தகைய நீட்டிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்த பட்டியலை பற்றி பார்க்கலாம்.  

டாடா மோட்டார்ஸ் (Tata Motors):  2021 ஏப்ரல் 1 முதல் 2021 மே 31-ம் தேதிக்குள் காலாவதியாகும் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கான உத்தரவாதம் மாறும் இலவச சேவை காலத்தையும் டாடா மோட்டார்ஸ் warranty and free service period ஜூன் 30,2021 வரை நீட்டிபதாக அறிவித்துள்ளது. 

மாருதி சுசுகி (Maruti Suzuki)  மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரீ சர்வீஸ் (free service), வாரன்ட்டி மற்றும் எக்ஸ்டென்டட் வாரன்ட்டியை (extended warranty) நீட்டித்து வழங்குவதாக அறிவித்துள்ளது. 2021 ஜூன் 30 வரை வழங்கப்படும் இந்த நீட்டிப்பு சேவை மார்ச் 15, 2021 முதல் 2021 மே 31 வரை காலாவதியாகும் ஃப்ரீ சர்வீஸ் மற்றும் வாரன்ட்டி காலத்திற்கு பொருந்தும் என்று நிறுவனம் கூறி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்படுவததாக நிறுவனம் கூறி உள்ளது. 

யமஹா (Yamaha):  

சர்வீஸ் மற்றும் வாரன்ட்டியுடன் தொடர்புடைய சலுகைகளை 2021 ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக யமஹா அறிவித்துள்ளது.

 ஃப்ரீ சர்வீஸ்: 

லாக்டவுனின் போது காலாவதியாகும் ஃப்ரீ சர்வீஸ்கள், 2021 ஜூன் 30 வரை நீட்டிக்கப்படும். Annual maintenance contract எனப்படும் வருடாந்த பராமரிப்பு ஒப்பந்தமும் 2021 ஜூன் 30 வரை நீட்டிக்கப்படும் 

 நார்மல் வாரன்ட்டி: 

லாக்டவுனின் போது காலாவதியாகும் நார்மல் வாரன்ட்டி 2021 ஜூன் 30 வரை நீட்டிக்கப்படும்.  எக்ஸ்டென்டட் வாரன்ட்டி: லாக்டவுனின் போது காலாவதியாகும் எக்ஸ்டென்டட் வாரன்ட்டி , 2021 ஜூன் 30 வரை நீட்டிக்கப்படும்.  

ரெனால்ட் (Renault):  

ரெனால்ட் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கான வாரன்ட்டி மற்றும் ஃப்ரீ சர்வீஸ் அட்டவணைகளை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2021 மற்றும் மே 31, 2021-க்கு இடையில் காலாவதியாகும் ஃப்ரீ சர்வீஸ் மற்றும் வாரன்ட்டி காலத்திற்கு இந்த நீட்டிப்பு பொருந்தும். இந்த சேவைகள் 2021 ஜூலை 31 வரை நீட்டிக்கப்படும். 

 எம்.ஜி மோட்டார் (MG Motor):  

2021 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எம்.ஜி மோட்டார் வாடிக்கையாளர்கள் பெற்றிருந்த வாரன்ட்டி மற்றும் ஃப்ரீ சர்வீஸ் அட்டவணைகள், இப்போது 2021 ஜூலை 31 வரை நீட்டிப்பை பெற்றுள்ளது.    


,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக