Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 18 மே, 2021

40 பெருசா? 50 பெருசா? இது முடியாத காரியம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
-------------------------------------
மகன் : 40 பெருசா? 50 பெருசா, அப்பா?
அப்பா : இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெருசு..
மகன் : அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்.. நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்.
அப்பா : 😖😖
-------------------------------------
ஒருவர் : எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?
டாக்டர் : ஏன்?
ஒருவர் : என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்..
டாக்டர் : 😅😅
-------------------------------------
மழை சொற்கள்...!!
-------------------------------------
💧 மழை சார்ந்து நிறைய சொற்கள் காரண பெயர்களாக தமிழில் உள்ளன.

💧 பறவை வகைகளில் 'மழைக்கண்ணி" என்றே ஒரு பறவை உள்ளது.

💧 வெட்டுக்கிளியில் ஒரு வகையினை குறிக்க 'மழைக்கிளி" என்ற சொல் உள்ளது.

💧 வானவில்லை குறிக்க 'மழைச்சிலை" என ஒரு சொல் இருக்கிறது.

💧 மழை போன்று அனைவருக்கும் அருள் தருவதில் திருமாலை 'மழையான்" என்று கூறி வழிபடுவர்.

💧 மழை பெய்யும்போது, மேகத்தால் மறைக்கப்பட்டு உண்டாகும் இருளை 'மழைக்காலிருட்டு" என்பர்.
-------------------------------------
அது முடியாத காரியம்...!!
-------------------------------------
ஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு... வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு. இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தார்கள்.

ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, 'இந்த கோட்டையின் பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது. இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை". அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு.

இதுக்கு முன்னாடி பெரிய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க. அவங்களாலயே திறக்க முடியல! நம்மால எப்படி முடியும்னு நிறைய பேர் கிளம்பிட்டாங்க. கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு!. ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டுருந்தாங்க..!! இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது என ராஜா எல்லாரிடமும் கூறினார்.

கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது என்று தயங்கினர். ஒருத்தன் மட்டும் கதவுக்கிட்ட போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான். அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு..!! பல பேர் தயங்குவதனாலும், ராஜா சொல்வதனாலும் முயற்சி செய்யாமல் இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்... என ராஜா அவனையே பாராட்டி தளபதி பதவியை வழங்கினார்.

'அது முடியாத காரியம்" என எப்போது உன் காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ அப்போதே புரிந்து கொள் நீ சாதிப்பதற்கு அருகில் வந்துவிட்டாய் என்று..!!
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக