Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 மே, 2021

சிவாஜியும் நான்தான்., எம்ஜிஆர்ரும் நான்தான்: "பேட்டில் கிரவுண்ட் மொபைல்" என்ற பெயரில் வரும் பப்ஜி விளையாட்டு!

பப்ஜி மொபைல் விளையாட்டு தடை

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நிறுவனம் பேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா என மாற்றி பதிவிட்டுள்ளது. இதே டெவலப்பர்கள் இந்தியாவில் ராயல் கேமை தொடங்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதேபோல் விரைவில் என குறிப்பிடப்பட்டிருந்தாலும் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா தொடக்க தேதி வெளியிடப்படவில்லை. இந்த விளையாட்டு விரைவில் தொடங்கப்படும் என்பது மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பப்ஜி மொபைல் விளையாட்டு தடை

தரவு பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்கு கடந்தாண்டு இந்தியாவில் பப்ஜி மொபைல் விளையாட்டு தடை செய்யப்பட்டது. இதையடுத்து டெவலப்பர்கள் புதிய பெயரில் பப்ஜி மொபைல் இந்தியாவை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்தனர். இதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலனில்லாமல் போனது. இதையடுத்து இறுதியாக நிறுவனம் இந்த விளையாட்டை பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா என்ற பெயரில் தொடங்க இருக்கிறது. இது பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் எதிரொலிக்கிறது.

இந்தியாவில் பப்ஜி விளையாட்டு

இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்டிருப்பதால் புதிய விளையாட்டானது புதிய பெயர் உடன் வருகிறது. அதுமட்டுமின்றி இது சாதாரன விளையாட்டாக இல்லாமல் இந்தியாவுக்கு வரவிருக்கும் புது விளையாட்டில் பல மாற்றங்கள் இருக்கும் என டெவலப்பர்கள் கிராப்டன் சமீபத்தில் இந்திய பதிப்பு குறித்த டீஸர்களில் தெரிவித்தனர்.

பப்ஜி டெவலப்பர்கள் பல்வேறு முயற்சி

இந்த விளையாட்டின் தகவல்கள் முன்னதாகவே வெளியிடப்பட்டன. அதுமட்டுமின்றி இந்தியாவில் பப்ஜி டெவலப்பர்கள் பணியமர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பப்ஜி கார்ப்பரேஷன் லிங்க்ட்இன் தளத்தில் பணி காலியிடங்கள் இருப்பதாக அறிவித்தது. அதுமட்டுமின்றி உள்ளூர் வீடியோ கேம், இ-ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் ஐடி தொழிலுக்கு இந்தியாவில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக நிறுவனம் அறிவித்தது. நாட்டின் பல பகுதிகளில் முதலீடு செய்வதன் மூலமாக அரசின் ஆதரவை பெற்றுக் கொள்ளலாம் என நிறுவனம் சிந்தித்திருக்கலாம்.

பயனர்கள் தரவு பாதுகாப்பு

மேலும் இந்திய சட்டங்களுக்கு இணங்க பயனர்கள் தரவு பாதுகாப்பை நிறுவனம் உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பப்ஜிக்கு என ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய நிறுவனம் பல்வேறு புதுப்பிப்போடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபத்துடன் பப்ஜி போஸ்டர்

முன்னதாக பப்ஜி போஸ்டரில் தீபத்தின் படத்தை பதிவிட்டு தீபாவளி என்று வெளியாகும் எனவும் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் எனவும் தொடர்ந்து தகவல்கள் பரவின. ஆனால் பப்ஜி மொபைல் இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என இந்திய அரசு வெளிப்படையாக தெரிவித்தது. அரசு தரப்பில் வெளியான தகவலுக்கு பிறகும் சமூகவலைதளங்களில் பப்ஜி வெளியீடு குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது.

டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாது

ஆரம்பத்தில் தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பப்ஜி, பிற சந்தைகளின் விரிவாக்க நடவடிக்கையாக பப்ஜி விளையாட்டை சீன நிறுவனமான டென்சென்ட் வாங்கியது. உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியா, பப்ஜியில் அதிக பயனர்களை கொண்ட நாடாக இருந்தது. தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பப்ஜி, சீன நிறுவனமான டென்செண்ட் கேம்ஸ் பங்குகளை கொண்டுள்ளதால் இந்தியாவில் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய அரசின் நடவடிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் இனி இந்தியாவில் சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாது என தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக