Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 மே, 2021

எச்சரிக்கை: இந்த கோவிட்-19 மெசேஜை தொடவே வேணாம்- யோசிக்காம டெலிட் பண்ணுங்க: என்ன நடக்குது தெரியுமா?

மால்வேர் ஆராய்ச்சியாளர்கள்

கோவிட்-19 தடுப்பூசி பதிவு என்ற பெயரில் போலி எஸ்எம்எஸ் ஒன்று பரவி வருகிறது. இந்த போலி தகவலை நம்பவோ பகிரவோ வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பயனர்கள் கோவிட்-19 தடுப்பூசிக்கு மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை நிறுவ வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மால்வேர் ஆராய்ச்சியாளர்கள்

லூகாஸ் ஸ்டெபனோ மற்றும் மால்வேர்ஹன்டர்டீம் என்ற மால்வேர் ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவலை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வு டுவிட்களை பதிவிட்டு இருக்கின்றனர். இந்த போலி எஸ்எம்எஸ் பதிவானது எந்த தடுப்பூசி பதிவுக்கும் வழிவகுக்காது. மாறாக இது போலி எஸ்எம்எஸ் ஆப்பிற்கு வழிவகுக்கும். இதன்மூலம் பயனர்கள் போலி கோவிட்-19 தடுப்பூசி பதிவு ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லி வலியுறுத்தப்படுவதோடு இதற்கான இணைப்பையும் வழங்குகிறது.

போலி எஸ்எம்எஸ் கோவிட்-19 பதிவு

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இந்த போலி எஸ்எம்எஸ் கோவிட்-19 பதிவு லிங்க்கை அணுகியதும் இதில் உள்ள மால்வேர் ஸ்மார்ட்போனை தாக்கி அது எஸ்எம்எஸ் மூலம் பரவி ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து தொடர்பு எண்களுக்கும் இந்த ஆப்பை பதிவிறக்க சொல்லை இணைப்பை செலுத்தி விடுகிறது. இந்த தடுப்பூசி ஆப் பயனர்களிடம் பல அனுமதிகள்(permission) கேட்கிறது.

பிற தீங்கிழைக்கும் செயல்

இதில் இருக்கும் மால்வேர் மூலம் ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து தொடர்பு எண்களுக்கும் தன்னை தானே எஸ்எம்எஸ் மூலமாக பரப்பி விடுகிறது. இதன்மூலம் பிற தீங்கிழைக்கும் செயல் குறித்து தற்போதுவரை கண்டறியவில்லை. தங்களது கேலரி, தொடர்பு எண் பட்டியல் உள்ளிட்டவற்றில் ஊடுறவு முடியும் எனவும் இந்த தகவலை மூன்றாம் தரப்பினருக்கு தங்களது அனுமதியின்றி பரப்பக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

கோவிட் -19 தடுப்பூசி இலவச பதிவு

அதிகாரப்பூர்வ கோவிட்-19 தடுப்பூசி போர்ட்டலில் தடுப்பூசி பதிவு செய்வதில் மக்கள் சிக்கலை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இந்த சிக்கல் விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கும் நேரத்தில் கோவிட்-19 தடுப்பூசி பதிவு செய்ய என தீங்கிழைக்கும் போலி எஸ்எம்எஸ் ஊடுறுவுகிறது. கோவிட் -19 தடுப்பூசி இலவச பதிவு என்ற பெயரில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது warm பயன்பாட்டை நிறுவும் இணைப்பைக் கொண்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வ வழிமுறைகள்

கோவிட் தடுப்பூசி பதிவு செய்யும் வழிமுறைகள், முதலில் Co-WIN போர்டலை ஓபன் செய்யவும், https://www.cowin.gov.in/home. என்ற வலைதளத்தை அணுகலாம். பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக Co-WIN 2.0 செயலியை பதிவிறக்கம் செய்யலாம். Co-WIN செயலி மற்றும் போர்டல் மூலமாக பதிவு செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆரோக்கிய சேது செயலி மூலமாகவும் முன்பதிவு நடக்கிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கும் அடுத்தாக 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள்

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள் குறித்து பார்க்கையில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக், மே மாத தொடக்கம் முதல் கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது. ஒரு டோஸ் விலை இந்திய மதிப்புப்படி ரூ.750 என கூறப்படுகிறது.

கோவிட் தடுப்பூசிகள் விலை

கோவிட் தடுப்பூசிகள் விலை குறித்து பார்க்கையில், கோவிட் தடுப்பூசி நாடு முழுவதும் இருக்கும் மத்திய அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும். இருப்பினும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் ஒரு டோஸ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் செலுத்த வேண்டும் என்றால் விலை நிர்ணயத்தில் கிடைக்கின்றன. கோவிஷீட் தடுப்பூசி மாநிலங்களுக்கு ரூ.400 எனவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் கோவாக்சின் விலை இன்னும் தெரியவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக