கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு வசதியும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. அதன்படி இந்நிறுவனத்தின் கூகுள் பே சேவையை இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கூகுள் பே செயலியில் தற்போது சர்வதேச பண பரிமாற்ற வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி கண்டிப்பாக அனைவருக்கும்பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
அதாவது சர்வதேச பண பரிமாற்ற வசதி என்னெவென்றால், அமெரிக்காவில் இருந்து இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும். மேலும் கூகுள் பே செயலியில் சர்வதேச பண பரிமாற்ற வசதி மிக எளிமையான வழிமுறையாக வழங்கப்பட்டு இருக்கிறது
இதற்கு முன் பேமெண்ட், யூபிஐ பேமெண்ட், பில் பேமெண்ட் என என உள்நாட்டு பேமெண்ட சேவைகளை மட்டும் வழங்கி வந்தது கூகுள் பே செயலி. தற்போது வர்த்தகத்தையும், சேவைகளையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றுதான் வெளிநாட்டு பேமெண்ட் சேவைக்குள் நுழைந்துள்ளது கூகுள் பே. எனவே கூகுள் பே செயலியை பயன்படுத்தும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் பயனர்கள் இனிமேல் அமெரிக்காவில் எவ்விதமான தடையுமின்றிப் பணத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பண பரிமாற்ற சேவைக்காக கூகுள் பே, இப்பிரிவில் முன்னோடியா இருக்கும் Western Union மற்றும் WISE ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. எனவே அமெரிக்காவில் இருக்கும் நபர் பணத்தை அனுப்பும் போது Western Union மற்றும் WISE இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
சர்வதேச பண பரிமாற்ற சேவையில் கவனிக்க வேண்டி முக்கியமான விஷயம் என்னவென்றால், அமெரிக்காவில் இருந்து பணத்தை அனுப்பும் போது இந்தியாவில் இருக்கும் நபர் பணத்தை முழுமையாக பெறமுடியும். ஆனால் கட்டணம்
அமெரிக்காவில் பணம் அனுப்புவோர் செலுத்தவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறை மூலம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் பயனர்கள் முழுமையான தொகையை பெறுவார்கள்.
themobileindian.com வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி, இதன் துவக்க சலுகையாக Western Unionபயன்படுத்திப் பணம் அனுப்பும் நபருக்கு ஜூன் 16 வரையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பணத்தை அனுப்ப முடியும்.அதேபோல் WISE பயன்படுத்தி பணத்தை அனுப்புவோருக்கு 500 டாலர் கட்டணமின்றி அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூகுள் நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவலின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 200 நாடுகளுக்கு இந்த சேவை நீட்டிக்கப்பட இருக்கிறது. அதாவது இந்த சேவையை இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை தாண்டி உலகின் சுமார் 200 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக