புதன், 9 ஜூன், 2021

160 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் விரைவில் வெளிவரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.!

அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 9

இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் மாடல்கள் கம்மி விலையில் சிறப்பான அம்சங்களுடன் வெளிவருகிறது என்றுதான் கூறவேண்டும்.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ,சியோமி மி 11 ப்ரோ, மி 11 அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்களில் கூட 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றள்ளது. ஆனால் இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் 165 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதாவது இதுபோன்ற பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு சார்ஜர் வருவதால் குறிப்பிட்ட நேரத்தில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

ஆனால் 165 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். இருந்தபோதிலும் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இன்பினிக்ஸ் நிறுவனம் 90 ஹெர்ட்ஸ் ஆதரவு 6.95-இன்ச் டிஸபிளே மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆகியவற்றைக் கொண்ட நோட் 10 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் இதில் 160W சார்ஜிங் ஆதரிக்கப்படவில்லை. விரைவில் 165 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக்கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம்செய்யும் இன்பினிக்ஸ் நிறுவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்