புதன், 9 ஜூன், 2021

இனி கம்மி விலை KaiOS பீச்சர் போன்களிலும் வாட்ஸ்அப் அழைப்பு சேவை: ஜியோபோன் பயனர்களுக்கு குஷி தான்..

இனி KaiOS தளங்களிலும் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP)

ஜியோபோன் மற்றும் பிற KaiOS அடிப்படையிலான பியூச்சர் போன் தொலைப்பேசிகளுக்கு இப்போது வாட்ஸ்அப் வாய்ஸ் கால் அழைப்பு சேவையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான இயங்குதளம் KaiOS டெக்னாலஜிஸுடன் கைகோர்த்து இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இப்போது மக்கள் தங்கள் KaiOS இயக்கும் சாதாரண பியூச்சர் போன் மூலமாகவும் இனி வாட்ஸ்அப் குரல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி KaiOS தளங்களிலும் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP)

இந்த புதிய அம்சம் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது என்பதைப் பயனர்கள் கவனிக்க வேண்டும், மேலும் பயனர்கள் வாட்ஸ்அப் அழைப்புகளைச் செய்வதற்குச் செயலில் வைஃபை அல்லது மொபைல் டேட்டா இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயம். வாட்ஸ்அப் மூலம் குரல் அழைப்பு சேவையை இப்போது உலகளவில் மில்லியன் கணக்கான பியூச்சர் போன் பயனர்களுக்கும் கிடைக்கும் படி நிறுவனம் செய்துள்ளது.

இனி KaiOS இயக்கப்பட்ட சாதனங்களுக்கு வாட்ஸ்அப் குரல் அழைப்பு

மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்வதற்கும் தொடர்பில் இருப்பதற்கும் முன்பைவிட இப்போது வாட்ஸ்அப்பை நம்பியுள்ளனர். உலகெங்கிலும் பல இடங்களில் இலகுவான இயக்க முறைமைகளில் உள்ள சமூகங்களை ஆதரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. KaiOS இயக்கப்பட்ட சாதனங்களுக்கு வாட்ஸ்அப் குரல் அழைப்புகளைக் கொண்டுவருவதன் மூலம் எளிமையான, மற்றும் நம்பகமான சேவையை உலகம் முழுக்க இணைக்க அனுமதிக்கிறது.

KaiOS வாட்ஸ்அப் வெர்ஷன் 2.2110.41

மக்கள் இனி எந்த வகையான மொபைல் சாதனத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல, இனி ஆண்ட்ராய்டு முதல் சாதாரண பியூச்சர் போன் பயனர்கள் வரை அனைவரும் வாட்ஸ்அப் மூலம் இணைந்திருக்கலாம் என்று வாட்ஸ்அப்பின் சி.ஓ.ஓ மாட் ஐடிமா கூறியுள்ளார். இந்த சமீபத்திய அம்சத்தைப் பெற, பயனர்கள் தங்கள் ஜியோபோன் மற்றும் பிற KaiOS சாதனங்களில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.2110.41 என்ற புதிய வெர்ஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

எப்படி KaiOS போனில் வாட்ஸ்அப் அழைப்பை மேற்கொள்ளவது?

KaiOS பயனர்கள் எப்படி வாட்ஸ்அப் அழைப்பை மேற்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம். பியூச்சர் போன் பயனர்கள் அல்லது ஜியோபோன் பயனர்கள் தங்களின் எந்தவொரு வாட்ஸ்ஆப் சாட்டை வேண்டுமானாலும் ஓபன் செய்து ஆப்ஷன்ஸ் என்ற விருப்பத்தை கிளிக் செய்து, குரல் அழைப்பு என்ற அம்சத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு பயனர்கள் டச் டிஸ்பிளே மூலம் செய்யும் செயலை, பியூச்சர் போன் பயனர்கள் பட்டன் மூலம் செய்ய வேண்டும்.

பச்சை கால் பட்டனை அழுத்தினால் போதுமா?

பியூச்சர் போன் பயனர்கள் சாதாரண அழைப்புகளை எவ்வாறு அட்டென்ட் செய்கிறார்களோ அதேபோல், பச்சை கால் பட்டனை அழுத்தி வாட்ஸ்அப் வாய்ஸ் கால் அழைப்புகளை எளிமையாக ஏற்கலாம். பயனர்கள் தங்கள் பியூச்சர் போன் மற்றும் ஜியோபோன் உள்ளிட்ட சாதனங்களில் இப்போது வாட்ஸ்அப் குரல் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கு, பயனர்கள் சமீபத்திய வாட்ஸ்அப் KaiOS வெர்ஷன் 2.2110.41-ஐ அப்டேட் செய்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்