புதன், 9 ஜூன், 2021

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இன்று அறிவிப்பு..!!

சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் மாநாடு படத்தின் பாடல் உரிமையை யுவன் ஷங்கர் ராஜாவின் U1 Records கைப்பற்றியதாகவும் படத்திற்கான முதல் பாடல் வெளியாகும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

    #Maanaau Audio rights bagged by @thisisysr ‘ s @U1Records . First sigle Release date and time wl b announced by our little Maestro on wednesday.
    Stay tuned ❤@SilambarasanTR_@vp_offl@kalyanipriyan @iam_SJSuryah @Richardmnathan @Anjenakirti @UmeshJKumar @silvastunt 1/2

    — sureshkamatchi (@sureshkamatchi) June 7, 2021

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்