-------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-------------------------------------
ஆசிரியர் : Tக்கு அப்புறம் என்ன வரும்?
மாணவன் : டீ குடிச்சதுக்கான பில் வரும்...
ஆசிரியர் : 😬😬
-------------------------------------
பாபு : கோயிலுக்குப் போய்ட்டு வந்த பிறகு வெங்கடாசலம் அவன் பெயரை 'வெங்சலம்"னு மாத்திக்கிட்டானாம்...
கோபு : ஏன்?
பாபு : கோயில்ல 'கடா"வை வெட்டிட்டானாம்...!
கோபு : 😆😆
-------------------------------------
அந்த நாள் ஞாபகம்...!!
-------------------------------------
😊 ரஜினி, கமல் படம் ரிலீஸ்...
😊 கபில்தேவின் கிரிக்கெட்...
😊 குமுதம், விகடன் நேர்மையாக இருந்தது...
😊 வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்...
😊 எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்...
😊 சாலையில் எப்போதாவது வண்டி வரும்...
😊 தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்...
😊 மயில் இறகுகள் குட்டி போட்டன, புத்தகத்தில்...
😊 மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, ஆங்கிலம்...
😊 ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்...
😊 பேருந்துக்குள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள்...
😊 எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்...
😊 கொளுத்தும் வெயிலிலும் முகமூடி அணியாத Makeup இல்லா அழகி...
😊 பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து, நம்மை மறக்காத ஆசிரியர்...
😊 கூட்டமான பஸ்ல, நா அடுத்த Stopping-ல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...
😊 7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி...
😊 இது மட்டுமா... இன்னும் ஏராளம்...!!
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
1. வசதியாய் உள்ள தமிழ் மாதம் எது?
.
.
.
கார்த்திகை
2. ஏழ்மையாய் உள்ள தமிழ் மாதம் எது?
.
.
.
.
ஐப்பசி
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக