Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 25 ஜூன், 2021

அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி.

அமைவிடம் :

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலையசுவாமி கோயில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் இவ்வாலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

மாவட்டம் :

அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி.

எப்படி செல்வது?

இத்தலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் பேருந்துகளில் செல்லலாம். நாகர்கோவிலிலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்திலும் சுசீந்திரம் உள்ளது.

கோயில் சிறப்பு :

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலான மும்மூர்த்திகள் குடிகொண்டிருந்தாலும் சுசீந்திரத்தின் நாயகனாக, ஆஞ்சநேயர் போற்றப்படுகிறார். சுமார் 18 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பத்தை 'விக்கினேஸ்வரி" இங்கு காணலாம்.

ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தில் கணபதியும், அவருக்கு இடது பக்கத்தில் அன்னை பார்வதியும் உள்ளனர். இவைகள் வேறெங்கும் காணவியலா காட்சி. 

ஒரே கல்லில் செதுக்கிய நவகிரகங்களின் சிற்பங்களை மேற்கூரையில் அமைத்துள்ளனர்.

இங்கு சங்கீதத் தூண்களை கொண்ட குலசேகர ஆழ்வார் மண்டபம் உள்ளது. அதன் நடுவே 18 வருடங்களாக தொடர்ந்து ஏரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கு-காடா விளக்கு இக்கோவிலின் தனிச்சிறப்பு.

கோயில் திருவிழா :

சித்திரை தெப்பத்திருவிழா, ஆவணி பெருநாள் திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, மாசி திருக்கல்யாண திருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை :

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி நிறைய பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். 

இதுதவிர உடல்பலம், மனபலம் ஆகியவை கிடைக்க இத்தலத்து அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர்கள் இங்குள்ள இறைவனிடம் வந்து மன அமைதியை பெற்று செல்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

பட்டு உடைகள் படைத்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தருதல், இறைவனுக்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றலாம். ஸ்ரீP ராம ஜெயம் எழுதி சாற்றலாம். பொருள் படைத்தோர் அன்னதானமும், திருப்பணிக்கு பொருளுதவியும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக