Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 24 ஜூன், 2021

பணத்துக்காக போலி தடுப்பூசி போடும் பகீர் தகவல்!

 Bogus vaccination camp: பணத்துக்காக போலி தடுப்பூசி போடும் பகீர் தகவல்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கண்டிவாலியில் குடியிருப்பு சங்கம் ஒன்றில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய தகவல் வெளியாகி அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்த போலி தடுப்பூசி முகாம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த பெண், போலி அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதாகவும் மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர். 

கோரேகாவ் (Goregaon) தடுப்பூசி மையத்துடன் தொடர்புடைய  குடியா யாதவ் என்ற பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் பல சுற்று விசாரணைகள் நடத்தப்பட்டப் பிறகு கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனை பெயரில், போலியாக கோவிட் -19 தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்து மோசடி செய்ததாக குடியா யாதவ் மீது Hiranandani Heritage Residents Welfare Association என்ற குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் புகார் அளித்தனர்.  மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் அந்த வீட்டு சங்கத்தின் உறுப்பினர்களை ஏமாற்றியதாக குடியா யாதவ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான தரவுகள் எதுவும் கோ-வின் (Co-WIN portal) போர்ட்டலில் காணப்படவில்லை என்றும், 'தடுப்பூசி' போட்ட பின்னர் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் வெவ்வேறு மருத்துவமனைகளின் பெயரில் இருப்பதாகவும் கண்டறிந்ததன் பிறகு இந்த புகார் கொடுக்கப்பட்டது. 

நானாவதி மருத்துவமனை, லைஃப்லைன் மருத்துவமனை மற்றும் நெஸ்கோ கோவிட் முகாம் என்ற பெயரில் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மும்பையின் வெர்சோவா மற்றும் கார் (Versova and Khar) பகுதிகளிலும் போலி தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்ததாக புகார்கள் வந்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக