Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 24 ஜூன், 2021

கடனை கட்டும் முன்பே கடன் வாங்கியவர் இறந்துவிட்டால்.. அடுத்து என்ன நடக்கும்.. !

அனைத்து கடனும் ஒன்றல்ல

இன்று பலரும் கேட்கும் ஒரு கேள்வி. வங்கியில் கடன் வாங்கியவர் இறந்து விட்டால், அடுத்து என்ன நடக்கும். என்ன செய்ய வேண்டும்.

குறிப்பாக வீட்டுக் கடன், கார் கடன், வாகன கடன் என பலவற்றையும் வாங்குகிறோம். ஒரு வேளை கடன் வாங்கியவர் இறந்து விட்டால், இந்த கடனிற்கு யார் பொறுப்பு. யார் இதனை திரும்ப செலுத்த வேண்டும்.

அப்படி வாடிக்கையாளர்கள் இறக்கும் பட்சத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும். வாருங்கள் பார்க்கலாம்.

அனைத்து கடனும் ஒன்றல்ல

இந்த கேள்விக்கான பதில், அனைத்து கடன்களுக்கும் ஒரே மாதிரி அல்ல. முதலில் இதனை தெரிந்து கொள்ள வேண்டும். கடன்கள் பாதுகாப்பான கடன் மற்றும் பாதுகாப்பற்ற கடன்கள் என இரு வகையாக உள்ளது. இதில் பாதுகாப்பான கடன் என்றால் வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகும். பாதுகாப்பற்ற கடன் என்பது தனி நபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்றவையாகும்.

வீட்டுக் கடன் நிலவரம்

வீட்டுக் கடன் வாங்கியவர் இறந்து விடுகிறார் என்றால், இணை விண்ணப்பதாரர் தான் அந்த கடனுக்கு முழு பொறுப்பு. மற்றொரு விண்ணப்பதாரர் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார் எனில், சிவில் நீதி மன்றம், கடன் மீட்பு தீர்ப்பாயம் அல்லது SARFAESI சட்டத்தின் கீழ் வீட்டினை மீட்கும் உரிமை வங்கிக்கு உண்டு.

சொத்துகள் ஏலம் விடுவதன் மூலம் மீட்கும்

மேலும் அந்த சொத்துகளை கையகப்படுத்தி, அதனை ஏலம் விடுவதன் மூலம் வங்கிகள் கடனை திரும்ப பெற்றுக் கொள்ளும். எனினும் குடும்ப உறுப்பினர்களுக்கு கடனை திரும்ப செலுத்த, குடும்ப உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும். ஒரு வேளை பாதிக்கப்பட்ட நபர் டெர்ம் பாலிசியோ அல்லது வேறு ஏதேனும் பாலிசி எடுத்திருந்தால், அதன் மூலம் கடனை திரும்ப செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது.

வாகன கடனில் எப்படி?

வாகன கடனை எடுக்கும் ஒருவர் இறந்துவிட்டால், இந்த கடனை திரும்ப செலுத்தும் பொறுப்பு குடும்பத்தினர் மீது வருகிறது. குடும்பத்தினர் ஒருவேளை தயாராக இல்லை எனில், வங்கி வாகனத்தினை கையகப்படுத்தி, ஏலம் விட்டு அதன் மூலம் தனது கடனை மீட்கும்.

தனிநபர் கடன் & கிரெடிட் கார்டு

தனி நபர் கடன், கிரெடிட் கார்டு பில்கள் போன்றவற்றின் இஎம்ஐ பாதுகாப்பற்ற கடன்களின் கீழ் வருகின்றன. ஒரு வேளை இந்த கடனை வாங்கியவர் இறந்து விட்டால், வாரிசுகளிடம் திரும்ப செலுத்தும்படி கேட்க முடியாது. இதனால் தான் இது பாதுகாப்பற்ற கடனாக பார்க்கப்படுகிறது. இதில் பணத்தினை மீட்க முடியாத பட்சத்தில் இதனை வங்கிகள் ரைட் ஆப் லிஸ்டில் சேர்க்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக