இந்தியாவிற்கு வர தயாராகும் டிக்டாக்.. மோடி அரசுடன் பேச்சுவார்த்தை..!
ஊர்க்கோடாங்கி
வியாழன், ஜூன் 24, 2021
அமெரிக்காவில்
டிக்டாக் மீது டிரம்ப் அரசு அறிவித்த தடை நீக்கப்பட்ட அனைத்து விதமான
முயற்சிகளையும் இந்நிறுவனம் எடுத்த நிலையில், தற்போது சாதகமாகச் சூழ்நிலை
உருவாகியுள்ளது. இதன் மூலம் டிக்டாக் நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க
நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் கட்டாயம் நீங்கியுள்ளது
இதேபோல்
டிக்டாக்-ன் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையாக விளங்கிய இந்தியாவில் இந்தச் செயலி தடை
செய்யப்பட்ட பின்பு, மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய ஐடி விதிகளை அனைத்து
டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் கட்டாயம் அமலாக்கம் செய்ய வேண்டும் என
அறிவித்துள்ளது.
அமெரிக்காவில்
டிக்டாக் செயலி
அமெரிக்காவில்
டிக்டாக் செயலி மீது இருந்த பிரச்சனைகள் குறைந்து வரும் நிலையில் இந்தியாவில்
மீண்டும் தனது சேவையைத் துவங்குவதற்காக முயற்சிகளில் இந்நிறுவனம் இறங்கியுள்ளதாகத்
தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டாக்
நிறுவனம்
தற்போது
கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையில், டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான
பையிட்டான்ஸ், இந்திய அரசால் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ள புதிய ஐடி விதிகளை
முழுமையாக ஏற்றுக்கொண்டு இயங்க தயார் என்றும், இந்தியாவில் மீண்டும் டிக்டாக்
செயலியைச் செயல்படுத்த உதவுமாறும் அனுமதிக்குமாறும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம்
வேண்டுகோள் விடுத்துக் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவில்
மீண்டும் டிக்டாக்
இந்நிலையில்
இந்தக் கடிதத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து பதில்
கட்டாயம் வரும் என டிக்டாக் நிறுவன அதிகாரிகள் நம்புகின்றனர். இந்திய டிஜிட்டல்
தளத்தில் கடந்த சில மாதங்களாக பல மாற்றங்கள் நடந்துள்ள நிலையிலும், அமெரிக்காவில்
இருந்த தடையும் நீக்கப்பட்டு உள்ளதாலும் சாதகமான பதில் கிடைக்கும் என டிக்டாக்
நம்புவதாக கூறப்படுகிறது.
1000
ஊழியர்கள்
இந்தியாவில்
டிக்டாக் செயலி இயங்கவில்லை என்றாலும் சுமார் 1000 ஊழியர்கள் இன்னும்
இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் தென்கிழக்கு
ஆசிய நாடுகளின் வர்த்தகத்திற்காகப் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் டிக்டாக்
திரும்பவும் வந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்
பண்ணுங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக