ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அண்மையில் இந்நிறுவனம் 5ஜி சோதனை செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டது. எனவே விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏர்டெல் நிறுவனம்வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சிறப்பான சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி அண்மையில்இந்நிறுவனம் இரண்டு திட்டங்களில் கூடுதல் நன்மையை வழங்கியுள்ளது. அதாவது ரூ.349 மற்றும் ரூ.299 திட்டங்களில் திருத்தம்செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் இந்த ரூ.349 மற்றும் ரூ.299 திட்டங்களை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்போது இந்த திட்டங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் முன்பு ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த சலுகை பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் முன்பு 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ மட்டுமே வழங்கியது. ஆனால் இப்போது இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 30ஜிபி அளவிலான மொத்த டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்குஒரு மாதத்திற்கான இலவச அணுகல், வரம்பற்ற பாடல் மாற்றங்களுடன் இலவச ஹெலோட்டூன்ஸ், இலவச விங்க் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் அண்மையில் ரூ.465 புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை 50 ஜிபி டேட்டா மற்றும் 60 நாட்கள் வேலிடிட்டி தரும் வகையில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தனிசரி 100 எஸ்எஎம்எஸ் நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக