Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 24 ஜூன், 2021

இனி வீடியோகாலில் இந்த சிக்கல் இல்லை: கூகுள் மீட்டில் பேக்கிரவுண்ட் மாற்றுவது எப்படி?

உங்கள் பின்னணியை மாற்றுவதற்கான வழிமுறைகள் 

கூகுள் மீட் செயலியில் கவனச்சிதறல்களை கட்டுப்படுத்தவும் வீடியோ அழைப்புகளை வேடிக்கையாக்கவும் சிறந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் உங்கள் வீடியோ காலில் பின்னணியை மங்கலாக்கலாம் அல்லது பின்னணியில் ஒரு படம் அமைத்து அலங்கரிக்கலாம்.

மிக நுட்பமான விஷயங்கள்

பின்னணியை மாற்றும்போது மிக நுட்பமான விஷயங்கள் காண்பிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நீங்கள் வீடியோஅழைப்பை மேற்கொள்ளும்போது தங்கள் பின்னணி மாற்றுவதற்கான முன்தேவைகளை பூர்த்தி செய்து விட்டீர்களா என்பது சோதித்து பார்க்க வேண்டும்.

உங்கள் பின்னணியை மாற்றுவதற்கான வழிமுறைகள்

கூகுள் கணக்கில் உள்நுழைந்திருக்கும் போது வீடியோ அழைப்பில் சேரும் பயனர்கள் மற்றும் அனுமதிக்கும் பயனர்கள் பயன்பாட்டில் ஒருமுறை மட்டுமே தங்கள் பின்னணியை மாற்ற முடியும். அதேபோல் கல்விக்கான கூகுள் பணியிடத்தில் இணையும் பயனர்கள் தங்கள் பின்னணி படங்களை தேர்ந்தெடுக்க முடியாது.

வீடியோ அழைப்புக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய வழிமுறை

கூகுள் மீட் பயன்பாட்டுக்கு சென்று மீட்டிங் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

காண்பிக்கப்படும் திரையில், வலதுபுறத்தில் இருக்கும் தேர்வை கிளிக் செய்து பின்னணியை மாற்று (Background Change) என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

Blur Your Background என்ற தேர்வை கிளிக் செய்து தங்களது பின்னணியை முழுவதுமாக மாற்றிக் கொள்ளலாம்.

பின்னணியை சற்று மங்கலாக்க வேண்டும் பட்சத்தில், Slightly Blur your Background என்ற தேர்வை கிளிக் செய்து கொள்ளலாம்.

அதேபோல் ப்ரீஅப்லோடட் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பயன்பாட்டில் preuploaded background என்ற தேர்வை கிளிக் செய்து புகைப்படத்தை தேர்ந்தெடுக்கலாம்.

தங்களது சொந்த புகைப்படத்தை பின்னணியாக வைக்க விரும்பும்பட்சத்தில் அப்லோட் புகைப்படம் என்ற தேர்வை கிளிக் செய்து புகைப்படத்தை தேர்வு செய்யலாம்.

இந்த வழிமுறைகளை மேற்கொண்டபின் அழைப்பில் இணையலாம்.

வீடியோகால் பயன்பாட்டில் இருக்கும் சமயத்தில் பின்னணி மாற்ற வழிமுறைகள்

திரையின் கீழ் இருக்கும் பயன்பாட்டில், Click More என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் கிளிக் Change Background என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

Blur Your Background என்ற தேர்வை கிளிக் செய்து தங்களது பின்னணியை முழுவதுமாக மாற்றிக் கொள்ளலாம்.

பின்னணியை சற்று மங்கலாக்க வேண்டும் பட்சத்தில், Slightly Blur your Background என்ற தேர்வை கிளிக் செய்து கொள்ளலாம்.

அதேபோல் ப்ரீஅப்லோடட் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பயன்பாட்டில் preuploaded background என்ற தேர்வை கிளிக் செய்து புகைப்படத்தை தேர்ந்தெடுக்கலாம்.

தங்களது சொந்த புகைப்படத்தை பின்னணியாக வைக்க விரும்பும்பட்சத்தில் அப்லோட் புகைப்படம் என்ற தேர்வை கிளிக் செய்து புகைப்படத்தை தேர்வு செய்யலாம்.

இந்த வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.

பின்னணியை மாற்று என்ற தேர்வு

பின்னணியை மாற்று என்பதை கிளிக் செய்யும்போது தங்களது கேமரா தாமாக இயக்கப்படும் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் பின்னணியை மாற்றும்போது பயன்பாட்டை சற்று தாமதமாக்கலாம். காரணம், தங்கள் சாதனத்தில் பிற பயன்பாட்டை வேகமாக இயக்குவதே ஆகும் என்பதை கவனிக்க வேண்டும்.

ஆலோசனை கூட்டம் மற்றும் கல்வி சம்பந்தமான அழைப்பு

கூகுள் மீட் பயன்பாடு ஆலோசனை கூட்டம் மற்றும் கல்வி சம்பந்தமான அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியம், ஆனாலும் சில மாற்றங்களை செய்ததுடன் இணையத்தில் மற்றும் ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு மொபைல் ஆப் பயன்பாடுகள் வழியாக அனைவரும் இலவசமாக வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக