இந்த கொரோனா தொற்று காலம், கிட்டத்தட்ட உலகத்தில் உள்ள பலரின் வாழ்க்கையை மாற்றி அமைந்துவிட்டது. பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் நிலைமைக்குப் பழகிவிட்டனர். இருப்பினும் இன்னும் சிலருக்கு வெளியில் சென்று வேலை செய்தால் தான் வருமான ஈட்ட முடியும் என்ற சூழ்நிலையே உருவாகியுள்ளது. இவர்களுக்கெல்லாம் இந்த காலகட்டத்தில் சம்பாத்தியம் செய்வது என்பது மிகவும் கடினமாகிவிட்டது.
இது மொபைல் கட்டிங் சார்.. மொபைல் கட்டிங்..
இருப்பினும், சிலர் தங்களின் இயல்பு வேலை பழக்கத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு, அதை இந்த காலத்திற்கு ஏற்றார் போல் புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படுவது அவர்களின் நிலைக்கு கைகொடுத்துள்ளது. அப்படி தான் கொரோனா காலத்தில் வேலையில்லாமல் இருந்த இளைஞர் ஒருவர் தற்பொழுது நடமாடும் முடிவெட்டும் கடையை உருவாக்கி, இரண்டு மடங்கு இரட்டிப்பான சம்பாத்தியத்தைப் பெரு வருகிறார்.
வேலை போன பின்பும் மனம் தளராத ஷிவப்பா
இவரின் செயல் நம்மூர் மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் பகுதியில் வசிக்கும் ஷிவப்பா என்பவர் சமீபத்தில் தான் வேலை செய்து வந்த வேளையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனியார் முடிவெட்டும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ஷிவப்பா ஊரடங்கு காரணமாகத் தனது வேலையை இழந்துள்ளார். ஆனாலும், மனம் தளராத ஷிவப்பா தற்போது முன்பை விட அதிகமாகச் சம்பாதித்து வருகிறார்.
ஒரே ஒரு கால் மட்டும் செய்தால் போதும் சலூன் வீடு தேடி வரும்
இவர் மேற்கொண்ட ஒரு வித்தியாசமான செயல் அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவருக்குத் தெரிந்த ஒரே தொழில் சிகை அலங்காரம் செய்வது மட்டும் தான் என்பதனால், அதைக் கைவிட முடியாது என்பதனால், அதை எப்படி மக்களிடம் பாதுகாப்பாக எடுத்துச் செல்வது என்று யோசித்து பேஸ்புக்கில் இருந்து ஒரு ஐடியாவை மேம்படுத்தி தனது வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார் ஷிவப்பா. ஒரே ஒரு கால் மட்டும் நீங்கள் செய்தால் போதும் மொத்த சலூன்னையும் உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்துவிடுகிறார் இவர்.
முன்பை விட இரட்டிப்பு வருமானம்
ஷிவப்பாவிடம் இருந்த ஒரு சிறிய ரக கூட்ஸ் ஆட்டோவை ஆவர் சிறிய மாற்றங்களைச் செய்து, அதை நடமாடும் சலூன் வாங்கியாகவே மாற்றிவிட்டார். கர்நாடகாவின் சிக்கமகளூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்போது ஷிவப்பா தனது சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். முதலில் அவர் வேலைப்பார்க்கும் போது மாதம் ரூ .10,000 மட்டுமே சம்பாதிக்க முடிந்தது என்றும், தற்பொழுது ஒரு நாளுக்கு சுமார் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக