Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 5 ஜூன், 2021

பயனுள்ள அம்சத்தைக் கொண்டுவந்த ஆரோக்கிய சேது செயலி.!

அண்மையில் வெளிவந்த தகவலின்படி கொரோனா பாதிப்பு விகிதமும், இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது. அதாவது தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்குகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆரோக்கிய சேது ஆப் பயன்பாடு மக்களுக்கு அசத்தலான அம்சத்தை வழங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாகஇந்த அம்சம் தடுப்பூசி நிலையை அதன் பிளாட்ஃபார்மில் புதுபிக்க உதவுகிறது.

அதாவது ஆரோக்கிய சேது ஆப் பயன்பாட்டை திறந்து தடுப்பூசி நிலையைப் புதுப்பிக்கவும் என்ற அம்சத்தை நீங்கள் பார்க்க முடியும்.உங்கள் நிலையை புதுபிக்க நீங்கள் நேரடியாக அதை கிளிக் செய்து நீல நிற டிக் அல்லது கேடயத்தை பெறலாம்.

குறிப்பாக ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே எடுத்துக் கொண்டவர்களுக்கு முகப்பில் பாதி தடுப்பூசி ஸ்டேட்டஸுடன் ஒற்றை நீல நிற எல்லையும்,ஆரோக்யா சேது லோகோவுடன் ஒரே டிக் கிடைக்கும். மேலும் நீங்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்திருந்தால் முகப்பில் இரட்டை பார்டரை காண்பிக்கும் மற்றும் ஆரோக்யா சேது லோகோவில் இரண்டு நீல நிற டிக் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தடுப்பூசி நிலையை எவ்வாறு புதுப்பிப்பது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

முதலில் உங்களது ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் ஆரோக்கிய சேது ஆப் பயன்பாட்டை டவுன்லோடு செய்து உள்நுழையவும்.

வழிமுறை-2

அடுத்து இந்த ஆப் வசதியில் தடுப்பூசி நிலையைப் புதுப்பித்தல் என்ற விருப்பம் இருக்கும், இதை கிளிக் செய்தவுடன்மொபைல் எண்ணை உள்ளிடவும். ஒருவேளை நீங்கள் வேறு எண்ணைப் பயன்படுத்தி COWIN-ல் பதிவு செய்திருந்தால், இங்கேபுதிப்பிக்கவும் என்ற விருப்பத்தில் கூட மொபைல் எண்ணை உள்ளிடலாம்.

வழிமுறை-3

அதன்பின்பு நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணுக்கு ஒடிபி-ஐப் பெறுவீர்கள், அதை இந்த செயலியில் பதிவிடவேண்டும். உங்கள் மொபைல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கணினி சரிபார்க்கும்.

SBI பயனர்களே உஷார்: இந்த தேதிக்குள் இதை செய்யுங்கள்- தவறினால் வங்கி சேவையில் சிக்கல் வரும்!SBI பயனர்களே உஷார்: இந்த தேதிக்குள் இதை செய்யுங்கள்- தவறினால் வங்கி சேவையில் சிக்கல் வரும்!

வழிமுறை-4

பின்னர் உங்களது மொபைல் எண் சரிபார்க்கப்பட்டதும், இந்த ஆப் பயன்பாடு சுயவிவரங்களின் பட்டியலைக் காண்பிக்கும். பின்பு உங்களது சுயவிவரத்தை தேர்வு செய்யவும். பின்பு உங்களது தடுப்பூசி நிலை கோவின் பின் தளத்தில் இருந்து உறுதிசெய்யப்படும். அதேசமயம் இந்த ஆரோக்கிய சேது ஆப் பயன்பாட்டிலும் புதுபிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக