Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 5 ஜூன், 2021

300 அடிக்கு மேல் வளர்ந்து வரும் பூமியின் திடீர் பள்ளம்.. இது சாதாரணம் இல்லை என்று எச்சரிக்கை; ஏன் தெரியுமா?

மெக்ஸிகோவில் உள்ள சாண்டா மரியா ஜகாடெபெக்கில் திடீரென பூமி உள்வாங்கி மாபெரும் பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. முதலில் சிறிய பள்ளமாகக் காட்சியளித்த இந்த சிங்க்ஹோல் நாளுக்கு நாள் இன்னும் பெரியதாகி வளர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வளர்ந்து வரும் திடீர் பள்ளம் அந்த பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. எதனால் இந்த பள்ளம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கான விடையை தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பூமியில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

சாண்டா மரியா ஜகாடெபெக்கில் சனிக்கிழமை தோன்றிய இந்த திடீர் பள்ளம், தண்ணீரில் நிரம்பியுள்ளது. மெக்ஸிகோ நகரத்திற்கு 80 மைல் தொலைவில் உள்ள இந்த நகரம் பியூப்லா மாநிலத்தில் உள்ளது, இந்த பள்ளம் பூமியில் திடீர் என்று உருவாகியுள்ளது. 

இந்த உருவாகிய பள்ளம் சில நாட்களில் வெகு வேகமாக வளர்ந்து, அருகிலுள்ள ஒரு வீட்டை விழுங்குவதற்குத் தயாராகி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    
அச்சுறுத்தலான பெரிய பள்ளம் "சிங்க்ஹோலா"

இந்த அச்சுறுத்தலான பெரிய பள்ளத்தை மக்கள் சிங்க்ஹோல் என்று அழைக்கின்றனர். எப்படி பூமியில் இந்த மாபெரும் பள்ளம் உருவானது என்று அந்த பகுதில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

 பள்ளத்திற்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் நபர் கூறியதாவது, ''6 மணி அளவில் பெரிய சத்தத்துடன் இடி இடித்தது போன்ற சத்தத்தை நாங்கள் கேட்டோம், அந்த இடி சத்தம் இப்படி ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று என்று நாங்கள் நினைக்கவில்லை'' என்று அவர் கூறியுள்ளார்.

 வெறும் 15 அடி அளவிற்கு உருவான பள்ளத்தின் தற்போதைய நிலை என்ன?
   
பின்னர் அந்த நபரின் மாமியார் சத்தத்தைப் பின்தொடர்ந்து வெளியில் வந்து பார்த்த போது, வீட்டிற்கு நெருங்கிய தூரத்தில் பூமியில் ஒரு பள்ளம் ஏற்பட்டிருப்பதைக் கண்டுள்ளார். அந்த பள்ளம் தண்ணீரால் மூழ்கி இருந்தது, பள்ளத்தில் இருந்த தண்ணீரில் குமிழ்கள் வந்து கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் பீதியடைந்தனர்,' என்று கூறியுள்ளனர். ஆரம்பத்தில் இந்த துளை வெறும் 15 அடி அளவிற்கு மட்டுமே இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த பள்ளம் இன்னும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
    
 300 அடி அகலம்.. 60 அடிக்கு மேல் ஆழம்.. இன்னும் வளர்ந்து வரும் பெரிய பள்ளம்

இந்த பள்ளம் தற்பொழுது சுமார் 300 அடி அகலத்திற்கு வளர்ந்துள்ளது. இதன் ஆழம் சுமார் 60 அடிக்கு மேல் இன்னும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பார்வையாளர்கள் இப்பகுதியில் கூடுவதைத் தடுக்க காவல்துறையினர் அந்த பகுதியில் பாதுகாப்பு தடுப்புகளை வைத்துள்ளனர். இந்த திடீர் பள்ளம் தரையை எதனால் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது என்பதை புலனாய்வானார்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 "மிகப்பெரிய ஆபத்து" என்று கூற காரணம் என்ன?

 நியூஸ் வீக் கருத்துப்படி, பியூப்லா மாநில ஆளுநர் மிகுவல் பார்போசா இந்த நிலைமையை 'மிகப்பெரிய ஆபத்து' என்று விவரித்தார். காரணம், யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் கணக்கெடுப்பின்படி, இந்த பள்ளத்தில் உள்ள நிலத்தடி நீர் நிலத்தடியில் இருக்கும் பாறை, அதன் மேற்பரப்பிற்கு அடியில் இருக்கும் மணல்களைக் கரைத்து பள்ளத்தைப் பெரிதாக்கி வருகிறது. 

இந்த பகுதியில் எப்போது வேண்டுமானாலும் சரிவுகள் ஏற்படுவதற்கான திடீர் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
    
 இன்னும் இந்த பள்ளம் பெரிய அளவில் உருமாற வாய்ப்பு

 'ஏனென்றால் நிலத்தடி தண்ணீர் பறந்து விரிந்து, அருகில் உள்ள இடங்களுக்கும் பரவி இருக்க அதிக வாய்ப்புள்ளது. இது மிகப் பெரியதாக நிலத்தடி மணலை கரைத்திருக்க வாய்ப்புள்ளது, இருப்பினும் நிலம் இன்னும் சில நாட்களுக்கு அப்படியே இருக்கும். 

திடீர் அழுத்தம் அல்லது போதுமான நிலத்தடி பலம் இல்லாமல் திடீர் சரிவுக்கு இது வழிவகுக்கும். இன்னும் இந்த பள்ளம் பெரிய அளவில் உருமாற வாய்ப்புள்ளது என்பதனால்
துளைக்கு அருகில் இருந்த குடும்பம் வெளியேற்றப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக