Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 ஜூன், 2021

இட்லி மாவு போண்டா

உங்களுக்கு மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது, நல்ல சூடான, காரசாரமான போண்டாவை சாப்பிட ஆசையாக உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் கடலை மாவு எதுவும் இல்லையா? கவலைப்பட வேண்டாம்.

 உங்கள் வீட்டில் இட்லி/தோசை மாவு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டே ஒரு அற்புதமான சுவையில், மிகவும் எளிமையான முறையில் போண்டா செய்யலாம். 

இந்த போண்டாவிற்கு தேங்காய் சட்னியை செய்து சாப்பிட்டால், இன்னும் அட்டகாசமாக இருக்கும்

  தேவையான பொருட்கள்

* இட்லி/தோசை மாவு - 1 கப் 
*அரிசி மாவு - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 1 
* வெங்காயம் - 1 
 * தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
 * கறிவேப்பிலை - சிறிது
 * உப்பு - சுவைக்கேற்ப
 * எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

 செய்முறை:

 * முதலில் ஒரு பௌலில் இட்லி/தோசை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 * பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இட்லி மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

* பின்பு அதில் அரிசி மாவு, துண்டுகளாக்கப்பட்ட அல்லது துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

 * அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். 

* எண்ணெய் சூடானதும், அதில் தயாரித்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி மாவு போண்டா தயார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக