புதன், 9 ஜூன், 2021

மோதி பார்க்கும் ஐக்யூ- குளிரூட்டும் வசதியோடு பட்ஜெட் விலையில் ஐக்யூ இசட்3- 5ஜி, 55W ஃபாஸ்ட் சார்ஜிங்!

விவோ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஐக்யூ நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் நாட்டில் இடைப்பட்ட பிரிவில் பல்வேறு சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ஐக்யூ இசட்3 என பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

ஐக்யூ 3 ஸ்மார்ட்போன் இந்தியா

ஐக்யூ 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மூன்று சேமிப்பு வகைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை கருத்தில் கொள்கையில் இது இந்திய சந்தையில் ரியல்மி மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஐக்யூ இசட் 3 விலை மற்றும் அம்சங்கள்

ஐக்யூ இசட் 3 விலை மற்றும் அம்சங்களை கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.19,900 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.20,990 ஆகவும் இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.22,990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது ஏஸ் ப்ளாக் மற்றும் சைபர் ப்ளூ வண்ண விருப்பங்களில் வருகிறது.

இன்று தொடங்கும் விற்பனை

ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போன் விற்பனை இன்று தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் இந்தியா மற்றும் ஐக்யூ இணையதளத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனுக்கு சலுகைகளும் கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ.1,500 கேஷ்பேக் கிடைக்கிறது.

ஐக்யூ இசட் 3 அம்சங்கள்

ஐக்யூ இசட் 3 அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.58 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இதன் காட்சி டைனமிக் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது கேமிங்கிற்கு தேவையான அனைத்து அம்சங்களை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தோடு வருகிறது.

திரவ குளிரூட்டும் முறை

இந்த சாதனத்தில் 5 அடுக்கு திரவ குளிரூட்டும் முறையோடு வருகிறது. இந்த குளிரூட்டும் அம்சமானது தொடர்ந்து கேம் விளையாடும் போதும் ஸ்மார்ட்போனின் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. அதேபோல் ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி செயல்படுத்தப்பட்ட சிப்செட் ஆகும். இந்த சாதனத்தின் குளிரூட்டும் அம்சம் பல்வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. பல பயன்பாடுகள் இருக்கும் போது ஸ்மார்ட்போன் சூடாவது பெரிய புகாராக இருக்கும் இந்த நேரத்தில் இந்த குளிரூட்டும் அம்சம் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது. அதேபோல் இதில் 8 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 8 எம்பி ஆழ சென்சார் உட்பட மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் அம்சத்தோடு செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புற கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி முன்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இடைப்பட்ட சாதனங்களில் காணப்படும் அதே மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

4400 எம்ஏஎச் பேட்டரி, 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஐக்யூ நிறுவனம் ஐக்யூ இசட் 3 ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய 55 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவுகளை வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபண் டச் ஓஎஸ் அமைப்பைக் கொண்டிருக்கிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் மற்றும் பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆதரவு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்