Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 ஜூன், 2021

மாணவிக்கு ரூ.35 கோடி இழப்பீடு வழங்கிய ஆப்பிள் நிறுவனம்.! காரணம் இதுதான்.!

ஆப்பிள் ஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஆப்பிள் ஐபோன்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

அண்மையில் புதிய ஐஒஎஸ் 15, ஐபேட் ஒஎஸ் 15, பிரைவசி ப்ரோடெக்ஷன், மேக் ஒஎஸ் மற்றும் வாட்ச் ஒஎஸ் 8 போன்ற பல அம்சங்கள் பற்றி அறிமுகம் செய்து நிகழ்வைச் சிறப்பாக்கினார் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அவர்கள். கண்டிப்பாக இந்த புதிய ஒஎஸ் அப்டேட் ஆனது பல்வேறு ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளதாக தகவல்

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு மாணவியின் ஆபாசப் படம் கசிந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் 35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தில் செயல்படும் பெகாட்ரன் என்ற நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் உரிமம் பெற்று, அதன் ஐபோன்களை பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. அதாவது இந்நிறுவனத்தின் ஐபோன்களை பெகாட்ரானில் பழுதுபார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

அதன்படி இந்நிறுவனத்தில் ஒரு மாணவி, தன் ஆப்பிள் ஐபோனை பழுது பார்க்ககொடுத்துள்ளார். பின்பு மாணவி கொடுத்த ஐபோனை பெகாட்ரன் பொறியாளர்கள் பழுது பார்த்துள்ளனர், அப்போது மாணவியின் ஐபோனில் சில ஆபாசப் படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்ததுடன் நிற்காமல், மாணவியின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். மேலும் பேஸ்புக் தளத்தில் சக தோழிகள் இதை பார்த்து, அந்த மாணவியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி வழக்கறிஞர்களை நாடினார்.

வழக்கறிஞர்கள் பெகாட்ரன் நிறுவனத்திடம் பல கோடி ரூபாய் இழப்பீடு கேட்டனர். அதற்கு அந்நிறுவனம் மறுத்து விட்டது. இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் பெகாட்ரன் வாயிலாக அந்த மாணவிக்கு 35 கோடி ரூபாய் கொடுத்து இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.

அதாவது அமெரிக்காவில் உள்ள சட்டப்படி, தனி உரிமம் பெற்று இயங்கும் நிறுவனங்களின் பணி சார்ந்த சட்ட விரோத செயல்களுக்கு, அவற்றுக்கு உரிமம் அளித்த நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறுப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக