Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 ஜூன், 2021

மனிதர்களுக்கு மூன்றாம் கண் கருவி உருவாக்கம்- அதிகநேர ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்?

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகிறது. நின்றால் ஸ்மார்ட்போன், நடந்தால் ஸ்மார்ட்போன், சாப்பிடும்போது ஸ்மார்போன் என அனைத்து இடங்களில் ஸ்மார்ட்போன் அங்கம் வகிக்கிறது. பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட்போன்களும் சமூகவலைதள கணக்குகளும் இருக்கிறது.

பிரதான தேவையாக இருக்கும் ஸ்மார்ட்போன்

உள்ளங்கையில் பதிக்கப்பட்ட கைரேகையாகவே இந்த ஸ்மார்ட்போன்கள் மாறி வருகிறது. அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் பாதிப்புகளும் அதிகமாவே இருக்கிறது. மறுபுறம் ஸ்மார்ட்போன்கள் தனிநபர்களின் பொக்கிஷமாக மாறுகிறது. தனிநபர்களின் தகவலை திருடுவதற்கு ஹேக்கர்கள் முணைப்போடு செயல்பட்டு வருகின்றனர். சாலைகளை கடக்கும்போது எதிரே வாகனம் வந்தாலோ நபர்கள் நடந்து வந்தாலோ கவனிப்பது இல்லை. அதிலும் விபத்துத்தான் நடக்கிறது.

அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் ரியல்மி சி25எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

ரோபோடிக் கண் எனக் கூறப்படும் கருவி

இதையடுத்து தென்கொரியாவை சேர்ந்த 28 வயது வடிவமைப்பாளர்., ரோபோடிக் கண் எனக் கூறப்படும் கருவியை வடிவமைத்துள்ளார். ரோபோடிக் கண் எனப்படும் மூன்றாவது கண்ணிற்கு Paeng Min-wook என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோடிக் கண் செயல்பாடு குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரோபோடிக் கண் பயன்பாடு

இந்த ரோபோடிக் கண் பயன்பாடு குறித்து பார்க்கையில், செல்போனை தலையை குணிந்து பயன்படுத்தும் போதும், தலையை குணியும் போதும் சென்சார் உதவியுடன் இந்த சாதனம் செயல்பட ஆரம்பிக்கும். அதாவது தலை குணிந்து இருக்கும் சமயத்தில் தாமாகவே இந்த சாதனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது.

பீப் ஒலி ஏற்படுத்தி எச்சரிக்கை

சாதனம் பொருத்தி இருக்கும் நபரை நோக்கி 2 மீட்டர் தொலைவில் வாகனமோ அல்லது வேறு ஏதாவது வந்தால் இதில் இருக்கும் சென்சார் கருவி மூலம் பீப் ஒலி எழுப்பப்படும். இதன் மூலம் இந்த ரோபோடிக் கண் அணிந்திருக்கும் நபர்கள் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுவர்.


தலை குனியும் சமயத்தில் சென்சார் ஆன்

ரோபோடிக் கண்கள் எந்த தடைகளையும் கண்டறிய உதவுகிறது. தலை குணிந்திருக்கும் சமயத்தில் இதில் இருக்கும் அல்ட்ரா சோனிக் சென்சார் கண்டறிந்து கைரோ சென்சார் பயன்பட ஆரம்பிக்கிறது. தென் கொரிய தொழில்துறை வடிவமைப்பாளர் ஸ்மார்ட்போன் ஜோம்பிஸ்-க்கு இது கொண்டு வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சுவர் போன்ற சாதனங்களில் மோதாமல் இருக்க இது பெரிதளவு உதவுகிறது.

மூன்றாவது கண் எனப்படும் ரோபோடிக் கண்

தென்கொரியாவை சேர்ந்தவர் மின் வூக். 28 வயதான இவர் மூன்றாவது கண் எனப்படும் ரோபோடிக் கண் பார்வையை உருவாக்கியுள்ளார். ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் நபர்கள் இதை நெற்றியில் கட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் தொடர்ந்து பயன்படுத்தும் போது ஏற்படும் காயங்களை தடுக்க இது உதவுகிறது.

2 மீட்டர் தொலைவுக்கு முன்பாக எச்சரிக்கை

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக் கொண்டே இருக்கும் போது எதிரே வரும் நபர்களையோ, வாகனங்களையோடு அல்லது சுவர்களில் மோத நேர்ந்தால் 2 மீட்டர் தொலைவுக்கு முன்பாக இது ஒலி எழுப்பி எச்சரிக்கிறது. இந்த காலத்தில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது என்றால் எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடுத்தன்மை குறித்து கேட்க வேண்டியதில்லை. இதையடுத்து ஸ்மார்ட்போன்களில் எதிர்காலத்தில் கூடுதல் கண் தேவைப்படும் என்பதிலும் ஆச்சரியமில்லை.

பேட்டரி பேக் மற்றும் மைக்ரோ கண்ட்ரோலர்

சென்சார்கள் அனைத்தும் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு சென்சார்களும் பேட்டரி பேக் மற்றும் மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கழுத்து குணிந்திருக்கும் சமயத்தில் சென்சார் ஆக்டிவேட் ஆகிறது நபரை நோக்கி 2 மீட்டர் தொலைவில் ஏதாவது வரும் போது மற்றொரு சென்சார் ஆக்டிவேட் ஆகி பீப் ஒலி எழுப்புகிறது. ஸ்மார்ட்போன்கள் அதிகம் பயன்படுத்தும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்கவே இது வடிவமைக்கப்படுகிறது. குறிப்பாக இது இளைஞர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக