Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 7 ஜூலை, 2021

பல மடங்கு குறைந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை!

பல மடங்கு குறைந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை! அந்த மாநில வாசிகளால் மட்டுமே பயன்பெற முடியும்!

குஜராத் மாநிலவாசிகளுக்காக மட்டும் ஆம்பியர் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டர்களின் விலையை பல மடங்கு குறைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.


நாடு முழுவதும் மின் வாகன ஊக்குவிப்பு பணிகள் மிக வேகமாக செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் குறைக்கும் நோக்கில், மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஃபேம்2 திட்டத்தின்கீழ் மானியம் வழங்குவது மற்றும் வரி சலுகைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளின்கீழ் மின் வாகன ஊக்குவிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில்கூட, ஃபேம்2 திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானியத்தை ஒன்றிய அரசு உயர்த்தி அறிவித்தது.

அதாவது, ரூ. 10 ஆயிரமாக இருந்த மானியத்தை அரசு ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது. ஆகையால், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை அதிரடியாக சரிந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையில், குஜராத் மாநில அரசு, அதன் பங்காக அண்மையில் மின் வாகன கொள்கைகுறித்த அறிவிப்பை வெளியிட்டது.

இதனால், இந்தியாவின் பிற மாநிலங்களைக் காட்டிலும் குஜராத்தில் மேலும் பல மடங்கு மின்சார இருசக்கர வாகனங்களின் விலை குறைய தொடங்கியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஆம்பியர் அதன் இரு மின்சார இருசக்கர வாகனங்களின் விலையை பல மடங்கு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம் மேற்கொண்டிருக்கும் அதிரடி விலை குறைப்பினால் இரு மின்சார டூ-வீலர்களின் விலை குறைந்துள்ளது. இதனால், ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவான விலைக் கொண்டதாக ஆம்பியர் ஸ்கூட்டர்கள் மாறியுள்ளன. இது குஜராத் மாநில வாசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

நிறுவனத்தின் மேக்னஸ் மற்றும் ஜூல் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களின் விலையே கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 74,900 ரூபாய்க்கு விற்கப்பட்ட மேக்னஸ் ஸ்கூட்டரின் விலையில் ரூ. 27 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மேக்னஸ் தற்போது ரூ. 47,990 விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதேபோன்று, ரூ. 68,990க்கு விற்கப்பட்டு வந்த ஜூல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையிலும் 27 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதன் விலை ரூ. 41,990 ஆக குறைந்திருக்கின்றது. இந்த விலை குறைப்பு நிகழ்வு மக்களை மேலும் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் என யூகிக்கப்பட்டுள்ளது.

ஆம்பியர் மேக்னஸ் மற்றும் ஜூல் ஆகிய இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுமே மணிக்கு 55 கிமீ வேகத்தில் செல்லக் கூடியவை. மேலும், இவை ஓர் முழுமையான சார்ஜில் 75 கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் வழங்கும். உருவம் மற்றும் சிறப்பு அம்சங்களில் மட்டுமே இவை வித்தியாசங்களுடன் காணப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக