
தமிழ்நாட்டில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம் வெளிசத்துக்கு வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குடலூருக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 12 ஒயின் பாட்டில்களை எலிகள் காலி செய்தன. COVID-19 தொற்று காரணமாக கடைகள் சிறிது காலம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், ஒவ்வொரு பகுதியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன் அடிப்பிடையில் திங்களன்று கடம்புழாவில் உள்ள டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்தபோது, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
12 ஒயின் பாட்டலை காலி செய்த எலிகள்:
இந்த அதிர்ச்சிக்கு காரணம், 12 குவாட்டர் மதுபான பாட்டில்களின் மூடிகள்
திறந்திருப்பதைக் கண்டனர். எப்படி பாட்டில் மூடி திறக்கப்பட்டது என
ஆராய்ந்த போது ஒயின் பாட்டிலில் எலிகள் கடித்த அடையாளங்கள் இருந்தன மற்றும்
எலிகள் தான் பாட்டிலை காலி செய்து இருக்கும் என அதிகாரிகள் ஒரு முடிவுக்கு
வந்தன்ர்.
மேலும் இதுக்குறித்து தகவல் அனுப்பியதும், டாஸ்மாக் கடை (Tasmac shop in Tamil nadu) மேற்பார்வையாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கடைக்குள் எலிகள் இருப்பதையும், அது தான் ஒயினை குடித்திருக்க வேண்டும். மற்ற தடயங்கள் எதுவும் இல்லை என அவர்கள் தெளிவுப்படுத்தினர். இந்த பாட்டில்களின் விலை சுமார் 1,500 ரூபாய் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக